Tuesday, September 24, 2024

யேகோவா சகார்

யேகோவா சகார்

Jehovah Zakar
பொருள்: நம்மை நினைவு கூரும் தேவன்
God who remembers
"தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தான் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்."
யாத்திராகமம் 2:24
(சகார் - நினைவுக் கூறுவதைக் குறிக்கும். "சகரியா" என்ற வேதாகமப் பெயர் தேவன் தனது மக்களையும் வாக்குத்தத்தங்களையும் மறவாதவர் என்பதைக் குறிக்கிறது.)
தேவன் மறக்கும் ஒரே காரியம், நம் பாவங்கள் மட்டுமே. பாவ மன்னிப்பு அளித்தப்பின், அவர் நம் பாவங்களை ஞயாபகம் வைத்திருப்பதில்லை என்று உறுதியளிக்கிறார்.
"நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன், உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்."
ஏசாயா 43:25
சிட்டுக்குருவிகளையும் எறும்புகளையும் கூட நினைவில் வைத்து, அவற்றுக்கான தேவைகளை சந்திக்கும் தேவனுக்கு நாம் எவ்வளவு சிறப்பாக இருக்க வேண்டும்! மனிதர்களாகிய நாம் வயதாகும்போது பல விஷயங்களை மறந்துவிடுகிறோம். ஆனால் தேவன் ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால், 400 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் அதை நினைவுக்கூறுகிறார்! ஆம், அவர் சொன்னதை செய்யும் தேவன்! அவர் நோவாவையும் அவன் குடும்பத்தையும் நினைவு கூர்ந்து, பேழையைத் திறந்தார். அவர் சாராள், ரெபேக்காள், ராகேல் மற்றும் அன்னாளையும் நினைவு கூர்ந்து, அவர்களின் கர்பத்தைத் திறந்தார். அவர் இஸ்ரவேல் ஜனங்களை நினைவு கூர்ந்து, அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். அவர் நிச்சயமாக உங்களையும் நினைவு கூர்ந்து ஆசீர்வதிப்பார்.
"ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும், அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்."
சங்கீதம் 105:8,9
சாலமோன் ராஜா வாலிபர்களுக்கு அவர்களின் நினைவில் தேவனை வைத்துக் கொள்ளுமாறும், உலகின் இன்பங்களுக்குப் பின்னால் ஓட வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார்.
"நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை..."
பிரசங்கி 12:1
[Strong's concordance:
2142. zakar - remember]

யேகோவா யிக் பெ-கிர்பெக்

யேகோவா யிக் பெ-கிர்பெக்

Jehovah Yik B'kirbekh
பொருள்: நம் நடுவில் இருக்கும் தேவன்
Lord God in our midst
"உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார். அவர் வல்லமையுள்ளவர். அவர் இரட்சிப்பார்..."
செப்பனியா 3:17
இந்த வசனம் தேவன் எப்போதும் நம்முடன் இருக்க விரும்புகிறார் என்பதை விளக்குகிறது. ஆதாம் ஏவாள் தொடங்கி, இன்று வரை தேவன் அநேக மனிதர்களுடன் உறவாடவே விரும்புகிறார்.
"தேவன் (எருசலேமின்) நடுவில் இருக்கிறார், அது அசையாது, அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்."
சங்கீதம் 46:5
மாற்கு 4:35–41 இல், இயேசுவும் அவருடைய சீஷர்களும் கலிலேயா கடலில் பயணித்தபோது பலத்த சுழல்காற்று உண்டானது. அவர்கள் மிகவும் பயந்து, இயேசுவை எழுப்பி, அவர் எப்படி இந்நேரத்தில் கவலையில்லாமல் தூங்க முடியும் என்றனர். காற்றையும் கடலையும் அமைதிப்படுத்திய பிறகு, இயேசு சீஷர்களின் அவிசுவாசத்தை கண்டித்தார்.
எப்படி மூழ்க முடியும்? அவர்கள் ஏன் அஞ்சினார்கள்? அவர்களுடன் படகில் தேவனே இருந்தாரே! தேவன் இருக்கும் வரை படகு மூழ்காது. இயேசு அவர்கள் நடுவே இருக்கும்போது அவர்கள் எதற்கும் பயந்திருக்கக் கூடாது அல்லவா...?
நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட தருணத்திலிருந்து, அவர் உங்கள் மத்தியில் இருக்கிறார். நீங்கள் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியும்போது பிதா, குமாரன், ஆவியானவராகிய திரித்துவ தேவன் உங்களுக்குள் வாசம் செய்கிறார். நீங்களும் உங்கள் குடும்பமும் தேவனுடைய பிரசன்னத்தை எப்போதும் அனுபவிப்பீர்கள். குடும்பமாக, நாம் வேதாகமத்தைப் படித்து, தேவனுடைய வழியில் நடக்கும்போது, இயேசு மகிழ்ச்சியடைந்து அவர் நம் வீட்டில் வாசம் செய்வார். உண்மையிலும் ஆவியிலும் ஜெபிக்கும்போது கர்த்தர் நம் நடுவே இருப்பார், பெரிய காரியங்களை நமக்கு வெளிப்படுத்துவார். அவர் நம்முடன் இருக்க நாம் எதற்கும் பயப்பட வேண்டாம். எந்நேரமும் நமக்குள் வாழும் பரிசுத்த ஆவியை நாம் துக்கப்படுத்தக்கூடாது. (எபே 4:30).
"சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு. இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்."
சகரியா 2:10
[Strong's concordance:
7130. qereb - inward part, midst]

யேகோவா சாலி

யேகோவா சாலி / யேகோவா சூரி

Jehovah Sali / Jehovah Tsuri
பொருள்: கர்த்தரே என் கன்மலை
God is my rock
"கர்த்தர் என் கன்மலையும்...என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்."
சங்கீதம் 18:2
"கர்த்தர் என் கன்மலை" என்ற வாக்கியம் தேவனுடைய பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு உவமை. இது சங்கீதம் 18:2 இல் தாவீது இஸ்ரவேலின் ராஜாவான பிறகு எழுதியதாகக் கருதப்படுகிறது.
ஒரு கன்மலை திடமானது, நிலையானது மற்றும் வலுவானது. அதை உடைக்க பலத்த சக்தி தேவைப்படுகிறது. பண்டைய காலங்களில், மக்கள் பாதுகாப்புக்காக குகைகளிலும் குன்றுகளிலும் தஞ்சம் புகுந்தனர். பல சமயங்களில் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றி உள்ளது. இஸ்ரவேலர்களின் தாகத்தைத் தணிக்க தேவன் ஒரு கன்மலையிலிருந்து தான் தண்ணீரைக் கொடுத்தார்.
பலிபீடங்கள், ஆலயங்கள், வீடுகள் மற்றும் நகரச் சுவர்களைக் கட்ட கன்மலைகளின் பாறைகள் பயன்படுத்தப்பட்டன. இஸ்ரவேலின் வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூர கற்களின் குவியல்களும் பயன்படுத்தப்பட்டன. அனைத்து தலைமுறைகளும் தேவனுடைய சட்டத்தை அறிந்து கொள்ள, மோசேக்கு வழங்கப்பட்ட பத்து கட்டளைகள் கல்லில்தான் பொறிக்கப்பட்டுள்ளன. “கன்மலை” என்ற வார்த்தை தேவனுடைய நீடித்த விசுவாசத்தை எடுத்துக்காட்டுகிறது.
சங்கீதம் 19:14 இல் தாவீது இவ்வாறு பாடுகிறார்: "என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக."
தாவீது சவுலால் பின்தொடரப்பட்டபோது, தேவனை தனது கன்மலையாகவும் மீட்பராகவும் அங்கீகரித்தார். தேவன் தாவீதை சவுலிடமிருந்து பாதுகாத்தார். தாவீது அவரைப் பின்தொடர்ந்த சவுலின் வீரர்களிடமிருந்து தப்பிக்க கன்மலைகள் மற்றும் குகைகளில் அடிக்கடி ஒளிந்து கொண்டார்.
அதேப்போல், யேகோவா சாலி நம்மை எதிரியின் கைகளில் இருந்து மீட்டு, உபத்திரவத்தின் போது நாம் தஞ்சம் அடையக்கூடிய கன்மலையாக இருக்கிறார்.
"கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை. உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை. எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை."
1 சாமுவேல் 2:2
[Strong's concordance:
5553. sela - a crag, cliff
6697. tsur - rock, cliff]

யேகோவா சில்கா

யேகோவா சில்கா

Jehovah Tsilka
பொருள்: கர்த்தரே என் நிழல்
God is my shade
"கர்த்தர் உன்னைக் காக்கிறவர், கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்."
சங்கீதம் 121:5
சங்கீதம் 121-வது அதிகாரம் தேவ பாதுகாப்பைப் பற்றியது. ஒரு பிரச்சனையின் போது நாம் மனிதர்களையோ நம்மிடம் உள்ள சொத்தையோ நம்பக்கூடாது. கஷ்டங்களும் ஆபத்துகளும் இருக்கும் போது, தேவனுக்குள் நம்மை ஆறுதல்படுத்த இந்த சங்கீதம் நமக்குக் கற்பிக்கிறது. தேவன் எந்நேரமும் நம்மைக் காப்பவர்; அவர் ஒருபோதும் சோர்வடைய மாட்டார்; அவர் ஒருபோதும் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை. அவரது நிழலின் கீழ் நாம் மகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் உட்கார முடியும். அவர் எப்போதும் நம் அருகிலேயே இருக்கிறார்.
வெயில் காலத்தில் சூரியனின் ஒளி நம்மை பாதிக்கலாம் - புற ஊதாக்கதிர்வீச்சு தோல் நோய்களை ஏற்படுத்துகிறது, புற்றுநோய் கூட வரலாம். தாவரங்களை உலர்த்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. சந்திரனின் கதிர்கள் கூட நம் கண்களை பாதிக்கலாம், அபாயகரமான வீக்கத்தை ஏற்படுத்தலாம். நாம் தேவனுடைய நிழலில் இருக்கும்போது, நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு இயற்கை தீங்குகளிலிருந்தும் அவர் நம்மைப் பாதுகாப்பார் என்று தேவன் நமக்கு உறுதியளிக்கிறார். நீங்கள் வெப்பமான வெயிலில் இருந்து நிழலைத் தேடுகிறீர்களா? வேதம் நிழல், தங்குமிடம் மற்றும் தேவனிடம் தஞ்சம் அடைவது பற்றிய வசனங்களால் நிரம்பியுள்ளது. உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கும் போது, இயேசுவே உங்கள் நிழல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இஸ்ரவேலர்களுடன் மேகஸ்தம்பமாக இருந்த அதே தேவன் இன்று நம்முடனும் இருக்கிறார். பாடுகளின் மத்தியில் நம்மைப் பாதுகாக்கிறார். அவருடைய செட்டைகளின் நிழலில் தஞ்சம் அடைவோம்!
"எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும், உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது, விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்."
சங்கீதம் 57:1
[Strong's concordance:
6738. tsel - a shadow]

Monday, September 16, 2024

யேகோவா ஷிட்கேனு

யேகோவா ஷிட்கேனு

Jehovah Tsidkenu
பொருள்: "நமது நீதியாயிருக்கிற கர்த்தர்"
God is our righteousness
"அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும், அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே."
- எரேமியா 23:6
சரியானதைச் செய்வதே "நீதி" எனப்படும். தேவன் எப்போதும் சரியானதைச் செய்வார் என்ற உண்மையைப் பற்றி இந்த நாமம் பேசுகிறது, ஏனென்றால் அவர் நீதியுள்ளவர்! எந்த மனிதனும் தேவனைப் போல் நீதியுள்ளவனாக இருக்க முடியாது. நமக்கு எந்த நீதியும் இல்லை என்பதை வேதம் தெளிவாக கூறுகிறது. நமக்கு நீதி இல்லை என்பது மட்டுமல்லாமல், நம்முடைய சொந்த முயற்சியால் நீதியை அடைவதும் சாத்தியமில்லை. இயேசு கிறிஸ்து மட்டுமே நம்முடைய நீதியின் ஒரே ஆதாரம். அப்போஸ்தலன் பவுல் ரோமர் 3:10 இல் "அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை..." என்று எழுதுகிறார்.
உலகில் நாம் நீதியுள்ளவர்களாக இருக்க முயன்றாலும் நாம் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம், நம்முடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது. (ஏசாயா 64:6)
இயேசுவே நம்முடைய ஷிட்கேனு. இயேசு தன்னை தேவனாகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் தன்னுடைய நீதியைத் தருகிறார். ஆதாமுடைய மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, இயேசு கிறிஸ்துவின் ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கும் ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.
இந்த செய்தியைப் படிக்கும்போது அவருடைய இரத்தம் உங்கள் பாவங்களை மூடி உங்களை சுத்தம் செய்யட்டும். ஆமென்!
"நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்."
2 கொரிந்தியர் 5:21
[Strong's Concordance:
6664. tsedeq - "tseh'-dek", from which "Tsidkenu" derived, means "to be stiff," "to be straight," or "righteous" in Hebrew.]

யேகோவா டோவ்

யேகோவா டோவ்

Jehovah Tov
பொருள்: "கர்த்தர் நல்லவர்"
God is good
"கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது."
- சங்கீதம் 107:1
"கர்த்தர் நல்லவர்" என்பதை கிறிஸ்தவ வட்டாரங்களில் அடிக்கடி கேட்கிறோம். இது நம் பாடல்கள், பிரசங்கங்களிலும், சில சமயங்களில் நம் வாழ்வில் நல்லதோ கெட்டதோ, எது நடந்தாலும் ஒரு பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. கர்த்தர் நம் தேவைகளை சந்திக்கிறார், நம்மை வழிநடத்துகிறார், நம்மைப் பாதுகாக்கிறார்... ஆனால் "யேகோவா டோவ்" அதை விட ஆழமான அர்த்தம் கொண்டது.
கர்த்தர் நன்மையாகவே இருக்கிறார். தேவனுடைய நன்மையை ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் காணலாம். நன்மையான காரியங்கள் நம் வாழ்வில் நிகழும்போது மட்டும் அவருடைய நன்மையைப் பற்றி நாம் நினைத்தாலும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் நம்மைச் சுற்றியுள்ள மிகச் சிறிய விஷயங்களில் கூட அவருடைய நன்மை எல்லா நேரத்திலும் நிறைந்துள்ளது.
"நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது..."
- யாக்கோபு 1:17
ஆதியாகமம் ஒன்றாம் அதிகாரத்தில், "தேவன் அது நல்லது என்று கண்டார்" என்று பலமுறை எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். நம்மைப் படைத்த தேவனுக்கு நம்மை மதிப்பிட உரிமை உண்டு. அவர் உருவாக்கின எல்லாவற்றையும் மதிப்பிட்டு, அது நல்லது என்று தீர்மானித்தார்.
"அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது..."
ஆதியாகமம் 1:31
"கடவுள் நல்லவராக இருந்தால், அவர் ஏன் தீமையை உருவாக்கினார்?" என்று பலர் கேட்கிறார்கள். கடவுள் தீமையை படைக்கவில்லை. மாறாக, தீமை என்பது நன்மை இல்லாத ஒன்று; தேவன் இல்லாத இடம் எதுவோ அங்கே இருள் இருக்கும். தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லை என்று இயேசு கூறுகிறார். நன்மை என்பது தேவனுடைய தன்மைகளில் ஒன்று, அவர் தீமையான எதையும் செய்ய மாட்டார். அவரைப் போல, நாமும் தீமைக்கு விலகி, நம்மால் முடிந்த நன்மைகளைச் செய்வோம்!
"தீமையை விட்டு விலகி, நன்மை செய், என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்."
சங்கீதம் 37:27
[Strong's concordance:
2896. towb - pleasant, agreeable, good]

யேகோவா திக்வா

யேகோவா திக்வா

Jehovah Tikvah
பொருள்: கர்த்தரே என் நம்பிக்கை
God is my hope
"கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயதுதொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்."
சங்கீதம் 71:5
எபிரேய மொழியில் 'திக்வா' என்ற வார்த்தை ஒரு நூல் (கயிறு) அல்லது நம்பிக்கையைக் குறிக்கும். இது "qawa" (காவா) என்ற மூல வார்த்தையிலிருந்து வருகிறது. நாம் எதிர்பார்க்கும் ஒரு காரியம் நடக்க வாய்ப்புள்ளது என்ற உணர்வை நாம் பொதுவாக "நம்பிக்கை" என்கிறோம். "யேகோவா திக்வா" என்று நாம் கூறும்போது தேவனே நம்முடைய எதிர்பார்ப்பும் நம் நம்பிக்கையுமாக இருக்கிறார் என்று கூறுகிறோம்.
இந்த வார்த்தை முதன் முதலாக யோசுவா புத்தகத்தில் வருகிறது. எரிகோவை வேவு பார்க்க வந்த இரண்டு இஸ்ரவேலர்களை ராகாப் என்ற வேசி காப்பாற்றினதால், தனது குடும்பத்தை விடுவிப்பதற்காக சிவப்பு நூலைக் கட்டச் சொல்கிறார்கள். அந்தச்சிவப்பு நூல் ராகாபின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. அவளுடைய குடும்பம் இஸ்ரவேலர்களால் காப்பாற்றப்பட அது மட்டுமே அவளுடைய ஒரே உத்தரவாதம்.
வாழ்க்கை நிச்சயமற்றது. என்ன நடக்கும் என்று நம்மால் உறுதியாக கணிக்க முடியாது. நம் நம்பிக்கை இப்படிப்பட்ட கேள்விக்குறிய இடங்களில் தான் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால், நாம் தொடர்ந்து கர்த்தர்மேல் நம்பிக்கையை வைத்து வாழ்க்கையை ஓட்டும் போது, தெளிவற்ற பல காரியங்களில் தெளிவடைவோம். கருப்பும் வெள்ளையுமாக இருந்த காரியங்கள் வண்ணமயமாகும்.
ராகாபைப் போலவே, நாமும் காப்பாற்றப்படுவதற்கு தகுதியற்றவர்கள்தான், ஆனால் இயேசு நம்மை மிகவும் நேசிக்கிறார். நம் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும், அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். அவரே நம் நம்பிக்கையின் நங்கூரம்!
"அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது."
எபிரேயர் 6:19
[Strong's concordance:
8615. tiqvah - cord / a hope
8431. tocheleth - hope]

யேகோவா ஷம்மா

யேகோவா ஷம்மா

Jehovah Shammah
பொருள்: கர்த்தர் பிரசன்னராயிருக்கிறார்
God is there
"... அந்நாள் முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்."
எசேக்கியேல் 48:35
முதல் தடவையாக "யேகோவா ஷம்மா" என்னும் பெயர் எசேக்கியேலின் புத்தகத்தின் கடைசி அதிகாரத்தில் வருகிறது. ஒரு நகரம் (எருசலேம்) கட்டப்படுமென்றும், அந்த நகரத்தில் தேவன் எப்போதும் பிரசன்னராயிருப்பார் என்றும் கூறுகிறார்.
சில விஷயங்கள் நம்மை விட்டுப் போன பிறகே நாம் அதின் மதிப்பைப் பாராட்டுகிறோம். அதேபோல், தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாததால், இஸ்ரவேல் தேவனுடைய பிரசன்னத்தை இழந்து தவித்தது. நம் தேவனோ மன்னித்து மீட்பவர். அவர் தனது மக்களின் ஜெபங்களையும், ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுடன் அவர் செய்த உடன்படிக்கையையும் நினைவுகூர்ந்து, மிகுந்த மகிமையுடன் இஸ்ரவேலுக்குத் திரும்ப வருகிறார். அவர் கைவிட்ட ஆலயத்திற்குத் திரும்பி, அன்றிலிருந்து அவர் தனது மக்கள் மத்தியில் வாசம் செய்தார். தேவனுடைய பிரசன்னம் ஆலயத்தில் மட்டுமல்ல, அவரை நேசிக்கும அனைவருக்கும் கிடைக்கும். நம் சரீரமே தேவனுடைய ஆலயம் என்று வேதாகமம் கூறுகிறது.
"நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?"
1 கொரிந்தியர் 3:16
தேவன் நம்மிடையே வாசம் செய்கிறார் என்பதை அறிந்து, ஒவ்வொரு கணமும் தேவனுடைய பிரசன்னத்தால் நாம் நிரப்பப்பட்டிருக்க விரும்ப வேண்டும். இவ்வுலகில் நாம் விரும்புவது எதுவும் நம்மிடத்தில் இருந்தாலும், இல்லாவிட்டலும் தேவ பிரசன்னம் நமக்கு அவசியம் தேவை.
"...இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்."
மத்தேயு 18:20
[Strong's concordance:
8033. sham - there, thither]

யேகோவா ஷமார்

யேகோவா ஷமார்

Jehovah Shamar
பொருள்: நம்மைக் காக்கும் தேவன்
God who preserves
"கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்."
சங்கீதம் 145:20
நாம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம். நம்மைப் பாதுகாப்பதே அவருடைய இயல்பு. இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் 40 வருடங்கள் நடந்து அலைந்தாலும், அவர்களில் பலவீனமானவர் ஒருவரும் இல்லை. பசி மற்றும் தாகத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர். அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், பாதரட்சைகள் கூட தேய்ந்துப்போகவில்லை. இன்று நாம் பயன்படுத்தும் பல தினசரி பொருட்கள் இரசாயனங்களால் பதப்படுத்தப்பட்டுள்ளன, இருப்பினும் அவை ஒரு சில நாட்களில் கெட்டுப்போகின்றன. ஆனால் தேவன் பாதுகாக்கும் எந்த ஒரு பொருளும், அவர் கட்டளையிடும் வரை நன்றாக இருக்கும்.
தேவன் பேழையில் நோவாவுடன் இருந்தார், வெள்ளத்தின் போது பேழைக்குள் விலங்குகள் எதுவும் இறக்கவில்லை. உள்ளே எடுத்துச் சென்ற உணவு கூட முழுவதும் பாதுகாக்கப்பட்டது. ஆபிரகாம் தனது 100ஆம் வயதில் ஈசாக்கைப் பெற்றப்பிறகு அவருக்கு மேலும் ஆறு குழந்தைகள் பிறந்தன. பின்பு 175 வயது வரை வாழ்ந்தார். 120 வயதில், மோசேக்கு நல்ல கண்பார்வை மற்றும் வலிமை இருந்தது. அவரது தோல் கூட சுருங்கவில்லை. தேவனுடைய பாதுகாப்பின் வல்லமை தானியேல் மற்றும் அவரது நண்பர்களிடமும் காணப்பட்டது.
அப்போஸ்தலர்கள் பல தாக்குதல்களில் இருந்து தப்பித்து, எதிரிகளால் கொல்லவே முடியாதவர்களாக இருந்தார்கள். அப்போஸ்தலன் யோவான் இதற்கு ஒரு சிறந்த உதாரணம் - அவர்கள் அவரை உயிருடன் கொதிக்க வைக்க முயன்றபோது, அவருக்கு எதுவும் ஆகவில்லை. எனவே அவரை பத்மூ தீவிற்கு அனுப்பினார்கள், அங்கு அவர் வெளிப்படுத்துதல் புத்தகத்தை எழுதினார். அப்போஸ்தலனாகிய பவுல் விசாரணைகளில் இருந்து தப்பிய பல கதைகளை நமக்குச் சொல்கிறார். ஏன், நம் கர்த்தராகிய இயேசு மரணத்திற்கே தோல்வியின் சுவையைக் கொடுத்தார்!
நாம் அவரது சிறகுகளின் நிழலில் இருக்கும்போது, எந்த நோயும் சத்துருவின் எந்த ஒரு ஆயுதமும் நம்மைத் தாக்காது.
"கர்த்தர் உன்னைக் காக்கிறவர், கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார், அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன்வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்"
சங்கீதம் 121:5,7,8
[Strong's Concordance:
8104. shamar: to keep, watch, preserve]

யேகோவா ஷாலோம்

யேகோவா ஷாலோம்

Jehovah Shalom
பொருள்: கர்த்தரே என் சமாதானம்
God is my peace
"...கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்..."
நியாயாதிபதிகள் 6:24
"யேகோவா ஷாலோம்" என்பது தேவனுடைய பல பழைய ஏற்பாட்டுப் பெயர்களில் ஒன்றாகும். கர்த்தருடைய தூதனானவர் ஓப்ராவில் தோன்றினபோது, கிதியோன் முதன்முதலில் தேவனுக்கு இந்தப் பெயரை சூட்டினார்.
"ஷாலோம்" என்பதற்கு எபிரேயத்தில் பல அர்த்தங்கள் உள்ளன. யூதர்கள் சந்தித்துக்கொள்ளும் போது "உங்களுக்குச் சமாதானம்" என்று பொருள்படும் "ஷாலோம் அலைக்கேம்" என்று ஒருவரை ஒருவர் வாழ்த்துவார்கள். [அரபு மொழியில் "சலாம் அலைக்கும்"]
இந்த வார்த்தை “முழுமை, பூரணம்” போன்ற வார்த்தைகளிலிருந்து வந்தது; அதாவது, “சமாதானம்” என்பது ஒற்றுமையின் விளைவாகும். நாட்டில் உள்ள அனைவரும் நிறைவாகவும் சமமாகவும் இருப்பதன் விளைவாகும்.
தேவன் எல்லாவற்றையும் ஒரு அழகான, இணக்கமான, ஒன்றுக்கொன்று சார்ந்த, பின்னப்பட்ட உறவில் இருக்கும்படி படைத்தார் (Balanced Ecosystem).
சரியான தொடர்புகளுடைய இயற்கைக் கூறுகள் ஒரு பிரபஞ்சத்தை உருவாக்குவது போல, சரியான உறவுகளுடைய மனிதர்கள் ஒரு சமூகத்தை உருவாக்குகிறார்கள். இந்த அமைதியான தன்மையைத்தான் வேதம் "ஷாலோம்" என்று அழைக்கிறது. சாலமோன், எருசலேம், ஷாலோமி போன்ற பெயர்கள் ஷாலோமில் இருந்து வந்தவை.
"ஷாலோம்" உள்ள ஒரு மனிதன் தேவனுடனான உறவிலும், தன்னுடன், குடும்பத்துடன், தோழர்களுடன், இயற்கையுடன் நிம்மதியாக வாழ்கிறான் என்று அர்த்தம். விரோதம் எதுவும் இல்லாமல் சரியான உறவுகளோடு இருப்பது மட்டும் "ஷாலோம்" அல்ல. மிக உயர்ந்த ஷாலோம் என்பது ஒருவரின் உறவுகளில் காணக்கூடிய இன்பங்களைக் குறிக்கும். இயேசு, "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக." என்று
யோவான் 14:27-இல் கூறுகிறார். நம் தேவன் சமாதானப்பிரபுவாக இருப்பதுபோல, நாமும் அனைவரோடும் சமாதானமாக வாழ முயற்சிப்போம்!
"சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்."
மத்தேயு 5:9
[Strong's number:
7965. shalom - completeness, soundness, welfare, peace]

யேகோவா சபயோத்

யேகோவா சபயோத்

Jehovah Sabaoth
பொருள்: சேனைகளின் கர்த்தர்
God of hosts / angel armies
"அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்துகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்..."
- 1 சாமுவேல் 1:3
இந்த வசனத்தில், எல்கானாவும் அவரது குடும்பத்தினரும் சேனைகளின் கர்த்தரை வணங்குவதற்காக சீலோவுக்குச் செல்வதைக் காண்கிறோம். சேனை என்பது ஒரு இராணுவத்தைக் குறிக்கும் பழமையானச் சொல். அன்னாள் தனது பிரார்த்தனையில் தேவனை 'சேனைகளின் கர்த்தர்' என்றுதான் அழைக்கிறாள். இந்த நாமம் ஆவிக்குறிய மற்றும் பூமிக்குரிய சர்வ சேனைகளின் மீதும் உள்ள தேவனுடைய அதிகாரத்தைக் குறிக்கிறது.
"சபயோத்" வேதாகமத்தில் சுமார் 283 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றுவரை இஸ்ரவேலர்களுக்கு பல நேரங்களில் தேவதூதர்களின் படை உதவுவது நமக்குத் தெரியும். எரிகோவுன் யுத்தத்தின் போது தேவதூதன் யோசுவாவிற்கு உதவியதை நாம் காண்கிறோம்.
"பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார். உருவின பட்டயம் அவர் கையில் இருந்தது. யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான்.
அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்..."
யோசுவா 5:13, 14
கிறிஸ்துவை உடைய நாம் எதை நினைத்தும் திகைக்க வேண்டாம். நம்முடன் தேவன் இருக்கிறார் என்று விசுவாசிக்க வேண்டும். நம் வழிகளிலெல்லாம் நம்மைக் காக்கும்படி, நமக்காகத் தம்முடைய தூதர்களுக்கு தேவன் கட்டளையிடுவார்.
[Strong's concordance:
6635. tsaba: army, war, warfare]

யேகோவா ராஃப்பா

யேகோவா ராஃப்பா / ரொஃபேகா

Jehovah Rapha / Ropheka
பொருள்: கர்த்தரே நம் பரிகாரி
God is our healer
"...நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்."
யாத்திராகமம் 15:26
வனாந்தரத்தில் குடிக்கத் தகுதியற்ற மாராவின் கசப்பான தண்ணீரைக் குணப்படுத்திய உடனேயே தேவன் இந்த வசனத்தைச் சொல்கிறார். தேவன் தண்ணீரைக் குணப்படுத்துவது மட்டுமல்லாமல், மக்களையும் குணப்படுத்துகிறார். இஸ்ரவேல் மக்கள் முணுமுணுத்த வேறொரு சம்பவத்தில், தேவன் கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பி தண்டித்தார். பின்னர் மோசே அவரிடம் மன்றாடியபோது, கர்த்தர் ஒரு வெண்கல சர்ப்பத்தை உருவாக்கி அதை ஒரு கம்பத்தில் வைக்கும்படி அறிவுறுத்தினார், அதை நோக்கிப்பார்த்தவர்கள் குணமடைந்தார்கள். (எண் 21:5-7).
இயேசு தம்முடைய ஊழியத்தின்போது செய்த பல காரியங்களில் ஒன்று, மக்களை குணப்படுத்துவது. அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவர் நம்மைக் குணப்படுத்த முடியும் என்று நம்பினால், தேவன் தற்காலிகமாக அல்ல, நிரந்தரமாக நம்மை எல்லா நோய்களிலிருந்தும் விடுவிப்பார். பாவமானது சரீரத்திலோ, ஆவியிலோ எப்போதும் ஒருவித நோய்க்கு நம்மை ஆளாக்கிவிடும். ஆனால் இயேசு நமக்கு சுகம் தருவார் என்று நாம் விசுவாசிக்கும்போது, அவருடைய இரத்தத்தால் நாம் சுத்தப்படுத்தப்படுகிறோம்.
"...அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்."
ஏசாயா 53:5
அவர் நம்மை அனைத்து வகையான நோய்கள், பலவீனங்கள், மனச்சோர்வு, அடிமைத்தனம், வலி ஆகியவற்றிலிருந்து நம்மை விடுவிப்பார். நம் நம்பிக்கை மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவமனைகள் அல்லது மருத்துவர்கள் மீது அல்ல, ஆனால் எல்லா நோய்களிலிருந்தும் நம்மை விடுவிக்கக்கூடிய கிறிஸ்துவின்மேல் உள்ளது!
"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன்."
2 நாளாகமம் 7:14
[Strong's number: 7495. rapha - to heal]

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...