Monday, September 16, 2024

யேகோவா ஷமார்

யேகோவா ஷமார்

Jehovah Shamar
பொருள்: நம்மைக் காக்கும் தேவன்
God who preserves
"கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்."
சங்கீதம் 145:20
நாம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம். நம்மைப் பாதுகாப்பதே அவருடைய இயல்பு. இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் 40 வருடங்கள் நடந்து அலைந்தாலும், அவர்களில் பலவீனமானவர் ஒருவரும் இல்லை. பசி மற்றும் தாகத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர். அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், பாதரட்சைகள் கூட தேய்ந்துப்போகவில்லை. இன்று நாம் பயன்படுத்தும் பல தினசரி பொருட்கள் இரசாயனங்களால் பதப்படுத்தப்பட்டுள்ளன, இருப்பினும் அவை ஒரு சில நாட்களில் கெட்டுப்போகின்றன. ஆனால் தேவன் பாதுகாக்கும் எந்த ஒரு பொருளும், அவர் கட்டளையிடும் வரை நன்றாக இருக்கும்.
தேவன் பேழையில் நோவாவுடன் இருந்தார், வெள்ளத்தின் போது பேழைக்குள் விலங்குகள் எதுவும் இறக்கவில்லை. உள்ளே எடுத்துச் சென்ற உணவு கூட முழுவதும் பாதுகாக்கப்பட்டது. ஆபிரகாம் தனது 100ஆம் வயதில் ஈசாக்கைப் பெற்றப்பிறகு அவருக்கு மேலும் ஆறு குழந்தைகள் பிறந்தன. பின்பு 175 வயது வரை வாழ்ந்தார். 120 வயதில், மோசேக்கு நல்ல கண்பார்வை மற்றும் வலிமை இருந்தது. அவரது தோல் கூட சுருங்கவில்லை. தேவனுடைய பாதுகாப்பின் வல்லமை தானியேல் மற்றும் அவரது நண்பர்களிடமும் காணப்பட்டது.
அப்போஸ்தலர்கள் பல தாக்குதல்களில் இருந்து தப்பித்து, எதிரிகளால் கொல்லவே முடியாதவர்களாக இருந்தார்கள். அப்போஸ்தலன் யோவான் இதற்கு ஒரு சிறந்த உதாரணம் - அவர்கள் அவரை உயிருடன் கொதிக்க வைக்க முயன்றபோது, அவருக்கு எதுவும் ஆகவில்லை. எனவே அவரை பத்மூ தீவிற்கு அனுப்பினார்கள், அங்கு அவர் வெளிப்படுத்துதல் புத்தகத்தை எழுதினார். அப்போஸ்தலனாகிய பவுல் விசாரணைகளில் இருந்து தப்பிய பல கதைகளை நமக்குச் சொல்கிறார். ஏன், நம் கர்த்தராகிய இயேசு மரணத்திற்கே தோல்வியின் சுவையைக் கொடுத்தார்!
நாம் அவரது சிறகுகளின் நிழலில் இருக்கும்போது, எந்த நோயும் சத்துருவின் எந்த ஒரு ஆயுதமும் நம்மைத் தாக்காது.
"கர்த்தர் உன்னைக் காக்கிறவர், கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார், அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன்வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்"
சங்கீதம் 121:5,7,8
[Strong's Concordance:
8104. shamar: to keep, watch, preserve]

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...