யேகோவா ஷாலோம்
Jehovah Shalom
பொருள்: கர்த்தரே என் சமாதானம்
God is my peace
நியாயாதிபதிகள் 6:24
"யேகோவா ஷாலோம்" என்பது தேவனுடைய பல பழைய ஏற்பாட்டுப் பெயர்களில் ஒன்றாகும். கர்த்தருடைய தூதனானவர் ஓப்ராவில் தோன்றினபோது, கிதியோன் முதன்முதலில் தேவனுக்கு இந்தப் பெயரை சூட்டினார்.
"ஷாலோம்" என்பதற்கு எபிரேயத்தில் பல அர்த்தங்கள் உள்ளன. யூதர்கள் சந்தித்துக்கொள்ளும் போது "உங்களுக்குச் சமாதானம்" என்று பொருள்படும் "ஷாலோம் அலைக்கேம்" என்று ஒருவரை ஒருவர் வாழ்த்துவார்கள். [அரபு மொழியில் "சலாம் அலைக்கும்"]
இந்த வார்த்தை “முழுமை, பூரணம்” போன்ற வார்த்தைகளிலிருந்து வந்தது; அதாவது, “சமாதானம்” என்பது ஒற்றுமையின் விளைவாகும். நாட்டில் உள்ள அனைவரும் நிறைவாகவும் சமமாகவும் இருப்பதன் விளைவாகும்.
தேவன் எல்லாவற்றையும் ஒரு அழகான, இணக்கமான, ஒன்றுக்கொன்று சார்ந்த, பின்னப்பட்ட உறவில் இருக்கும்படி படைத்தார் (Balanced Ecosystem).
சரியான தொடர்புகளுடைய இயற்கைக் கூறுகள் ஒரு பிரபஞ்சத்தை உருவாக்குவது போல, சரியான உறவுகளுடைய மனிதர்கள் ஒரு சமூகத்தை உருவாக்குகிறார்கள். இந்த அமைதியான தன்மையைத்தான் வேதம் "ஷாலோம்" என்று அழைக்கிறது. சாலமோன், எருசலேம், ஷாலோமி போன்ற பெயர்கள் ஷாலோமில் இருந்து வந்தவை.
"ஷாலோம்" உள்ள ஒரு மனிதன் தேவனுடனான உறவிலும், தன்னுடன், குடும்பத்துடன், தோழர்களுடன், இயற்கையுடன் நிம்மதியாக வாழ்கிறான் என்று அர்த்தம். விரோதம் எதுவும் இல்லாமல் சரியான உறவுகளோடு இருப்பது மட்டும் "ஷாலோம்" அல்ல. மிக உயர்ந்த ஷாலோம் என்பது ஒருவரின் உறவுகளில் காணக்கூடிய இன்பங்களைக் குறிக்கும். இயேசு, "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக." என்று
யோவான் 14:27-இல் கூறுகிறார். நம் தேவன் சமாதானப்பிரபுவாக இருப்பதுபோல, நாமும் அனைவரோடும் சமாதானமாக வாழ முயற்சிப்போம்!
"சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்."
மத்தேயு 5:9
[Strong's number:
7965. shalom - completeness, soundness, welfare, peace]
No comments:
Post a Comment