யேகோவா திக்வா
Jehovah Tikvah
பொருள்: கர்த்தரே என் நம்பிக்கை
God is my hope
சங்கீதம் 71:5
எபிரேய மொழியில் 'திக்வா' என்ற வார்த்தை ஒரு நூல் (கயிறு) அல்லது நம்பிக்கையைக் குறிக்கும். இது "qawa" (காவா) என்ற மூல வார்த்தையிலிருந்து வருகிறது. நாம் எதிர்பார்க்கும் ஒரு காரியம் நடக்க வாய்ப்புள்ளது என்ற உணர்வை நாம் பொதுவாக "நம்பிக்கை" என்கிறோம். "யேகோவா திக்வா" என்று நாம் கூறும்போது தேவனே நம்முடைய எதிர்பார்ப்பும் நம் நம்பிக்கையுமாக இருக்கிறார் என்று கூறுகிறோம்.
இந்த வார்த்தை முதன் முதலாக யோசுவா புத்தகத்தில் வருகிறது. எரிகோவை வேவு பார்க்க வந்த இரண்டு இஸ்ரவேலர்களை ராகாப் என்ற வேசி காப்பாற்றினதால், தனது குடும்பத்தை விடுவிப்பதற்காக சிவப்பு நூலைக் கட்டச் சொல்கிறார்கள். அந்தச்சிவப்பு நூல் ராகாபின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. அவளுடைய குடும்பம் இஸ்ரவேலர்களால் காப்பாற்றப்பட அது மட்டுமே அவளுடைய ஒரே உத்தரவாதம்.
வாழ்க்கை நிச்சயமற்றது. என்ன நடக்கும் என்று நம்மால் உறுதியாக கணிக்க முடியாது. நம் நம்பிக்கை இப்படிப்பட்ட கேள்விக்குறிய இடங்களில் தான் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால், நாம் தொடர்ந்து கர்த்தர்மேல் நம்பிக்கையை வைத்து வாழ்க்கையை ஓட்டும் போது, தெளிவற்ற பல காரியங்களில் தெளிவடைவோம். கருப்பும் வெள்ளையுமாக இருந்த காரியங்கள் வண்ணமயமாகும்.
ராகாபைப் போலவே, நாமும் காப்பாற்றப்படுவதற்கு தகுதியற்றவர்கள்தான், ஆனால் இயேசு நம்மை மிகவும் நேசிக்கிறார். நம் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும், அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். அவரே நம் நம்பிக்கையின் நங்கூரம்!
"அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது."
எபிரேயர் 6:19
[Strong's concordance:
8615. tiqvah - cord / a hope
8431. tocheleth - hope]
No comments:
Post a Comment