Monday, September 16, 2024

யேகோவா சபயோத்

யேகோவா சபயோத்

Jehovah Sabaoth
பொருள்: சேனைகளின் கர்த்தர்
God of hosts / angel armies
"அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்துகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்..."
- 1 சாமுவேல் 1:3
இந்த வசனத்தில், எல்கானாவும் அவரது குடும்பத்தினரும் சேனைகளின் கர்த்தரை வணங்குவதற்காக சீலோவுக்குச் செல்வதைக் காண்கிறோம். சேனை என்பது ஒரு இராணுவத்தைக் குறிக்கும் பழமையானச் சொல். அன்னாள் தனது பிரார்த்தனையில் தேவனை 'சேனைகளின் கர்த்தர்' என்றுதான் அழைக்கிறாள். இந்த நாமம் ஆவிக்குறிய மற்றும் பூமிக்குரிய சர்வ சேனைகளின் மீதும் உள்ள தேவனுடைய அதிகாரத்தைக் குறிக்கிறது.
"சபயோத்" வேதாகமத்தில் சுமார் 283 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றுவரை இஸ்ரவேலர்களுக்கு பல நேரங்களில் தேவதூதர்களின் படை உதவுவது நமக்குத் தெரியும். எரிகோவுன் யுத்தத்தின் போது தேவதூதன் யோசுவாவிற்கு உதவியதை நாம் காண்கிறோம்.
"பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார். உருவின பட்டயம் அவர் கையில் இருந்தது. யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான்.
அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்..."
யோசுவா 5:13, 14
கிறிஸ்துவை உடைய நாம் எதை நினைத்தும் திகைக்க வேண்டாம். நம்முடன் தேவன் இருக்கிறார் என்று விசுவாசிக்க வேண்டும். நம் வழிகளிலெல்லாம் நம்மைக் காக்கும்படி, நமக்காகத் தம்முடைய தூதர்களுக்கு தேவன் கட்டளையிடுவார்.
[Strong's concordance:
6635. tsaba: army, war, warfare]

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...