யேகோவா ராஃப்பா / ரொஃபேகா
Jehovah Rapha / Ropheka
பொருள்: கர்த்தரே நம் பரிகாரி
God is our healer
வனாந்தரத்தில் குடிக்கத் தகுதியற்ற மாராவின் கசப்பான தண்ணீரைக் குணப்படுத்திய உடனேயே தேவன் இந்த வசனத்தைச் சொல்கிறார். தேவன் தண்ணீரைக் குணப்படுத்துவது மட்டுமல்லாமல், மக்களையும் குணப்படுத்துகிறார். இஸ்ரவேல் மக்கள் முணுமுணுத்த வேறொரு சம்பவத்தில், தேவன் கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பி தண்டித்தார். பின்னர் மோசே அவரிடம் மன்றாடியபோது, கர்த்தர் ஒரு வெண்கல சர்ப்பத்தை உருவாக்கி அதை ஒரு கம்பத்தில் வைக்கும்படி அறிவுறுத்தினார், அதை நோக்கிப்பார்த்தவர்கள் குணமடைந்தார்கள். (எண் 21:5-7).
இயேசு தம்முடைய ஊழியத்தின்போது செய்த பல காரியங்களில் ஒன்று, மக்களை குணப்படுத்துவது. அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவர் நம்மைக் குணப்படுத்த முடியும் என்று நம்பினால், தேவன் தற்காலிகமாக அல்ல, நிரந்தரமாக நம்மை எல்லா நோய்களிலிருந்தும் விடுவிப்பார். பாவமானது சரீரத்திலோ, ஆவியிலோ எப்போதும் ஒருவித நோய்க்கு நம்மை ஆளாக்கிவிடும். ஆனால் இயேசு நமக்கு சுகம் தருவார் என்று நாம் விசுவாசிக்கும்போது, அவருடைய இரத்தத்தால் நாம் சுத்தப்படுத்தப்படுகிறோம்.
"...அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்."
ஏசாயா 53:5
அவர் நம்மை அனைத்து வகையான நோய்கள், பலவீனங்கள், மனச்சோர்வு, அடிமைத்தனம், வலி ஆகியவற்றிலிருந்து நம்மை விடுவிப்பார். நம் நம்பிக்கை மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவமனைகள் அல்லது மருத்துவர்கள் மீது அல்ல, ஆனால் எல்லா நோய்களிலிருந்தும் நம்மை விடுவிக்கக்கூடிய கிறிஸ்துவின்மேல் உள்ளது!
"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன்."
2 நாளாகமம் 7:14
[Strong's number: 7495. rapha - to heal]
No comments:
Post a Comment