யேகோவா சிம்ராத்
Jehovah Zimrath
பொருள்: கர்த்தரே என் கீதமானவர்
God is my song
"சிம்ராத்" (உச்சரிப்பு: "zimrath") என்ற வார்த்தையின் வேர் 'சமார்' (zamar) ஆகும். இது வேதத்தில் உள்ள பாடலைக் குறிக்கும் ஏழு வார்த்தைகளில் ஒன்றாகும். இது தேவனைத் துதிப்பதற்காக பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் அல்லது இசையைக் குறிக்கும்.
யாத்திராகமம் 15:2, சங்கீதம் 118:14 மற்றும் ஏசாயா 12:2 இல் "கர்த்தரே என் கீதம்" என்று விவரிக்கப்படுகிறார். அவர் தனது ஜனத்தின் இரட்சிப்பின் காரணராக இருப்பதால், அவரே அவர்களின் கீதமும் துதிக்குப் பாத்திரராகவும் இருக்கிறார்.
இசை என்பது தேவன் மனிதர்களுக்குத் தந்த பரிசு. இசை நம்மை உற்சாகப்படுத்தவும், கடினமான காலங்களில் ஆறுதல்படுத்தவும், நம்மை ஊக்குவிக்கவும், நம் இதயங்களில் உள்ளதை வெளிப்படுத்தவும், ஒரு பொழுதுபோக்காகவும் இருக்கிறது. சில சமயங்களில் வார்த்தைகளை விட அதிகமாக இசையால் நம் உள்ளத்தை ஆழமாகத் தொட முடியும்.
சாத்தான் (லூசிபர்) ஒரு பிரதான தேவத்தூதனாக இருந்தபோது பரலோகத்தில் ஆராதனை நடத்தும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தனது அகங்காரத்தினால் அந்த அதிகாரத்தை இழந்தார். விழுந்துப்போன தூதர்கள் தேவ ராஜ்யத்திற்கு எதிராக மக்களை திருப்ப உலக இசையைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் சரீரத்தின் விசுவாசிகளாகிய நாம் உலகத்தாரல்ல என்று அழைக்கப்படுகிறோம். கொலோசேயர்களுக்கு எழுதிய கடிதத்தில், அப்போஸ்தலனாகிய பவுல், கிறிஸ்துவின் வசனம் சகல ஞானத்திலும் உங்களுக்குள்ளே பரிபூரணமாக வாசம் செய்வதாக என்று சபைக்கு நினைவூட்டுகிறார்.
"சங்கீதங்களினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பக்தியுடன் பாடி..."
கொலோசெயர் 3:16
நாம் பாடும் பாடல்களின் காரணராக தேவன் எப்போதும் இருப்பாராக! அவருக்கே எல்லா துதியும், கனமும், மாட்சிமையும் இருப்பதாக!
[Strong's concordance:
2176. zimrath - song
2172. zimrah - melody, song
2167. zamar - to make music in praise of God]
No comments:
Post a Comment