Monday, September 16, 2024

யேகோவா ஷம்மா

யேகோவா ஷம்மா

Jehovah Shammah
பொருள்: கர்த்தர் பிரசன்னராயிருக்கிறார்
God is there
"... அந்நாள் முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்."
எசேக்கியேல் 48:35
முதல் தடவையாக "யேகோவா ஷம்மா" என்னும் பெயர் எசேக்கியேலின் புத்தகத்தின் கடைசி அதிகாரத்தில் வருகிறது. ஒரு நகரம் (எருசலேம்) கட்டப்படுமென்றும், அந்த நகரத்தில் தேவன் எப்போதும் பிரசன்னராயிருப்பார் என்றும் கூறுகிறார்.
சில விஷயங்கள் நம்மை விட்டுப் போன பிறகே நாம் அதின் மதிப்பைப் பாராட்டுகிறோம். அதேபோல், தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாததால், இஸ்ரவேல் தேவனுடைய பிரசன்னத்தை இழந்து தவித்தது. நம் தேவனோ மன்னித்து மீட்பவர். அவர் தனது மக்களின் ஜெபங்களையும், ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுடன் அவர் செய்த உடன்படிக்கையையும் நினைவுகூர்ந்து, மிகுந்த மகிமையுடன் இஸ்ரவேலுக்குத் திரும்ப வருகிறார். அவர் கைவிட்ட ஆலயத்திற்குத் திரும்பி, அன்றிலிருந்து அவர் தனது மக்கள் மத்தியில் வாசம் செய்தார். தேவனுடைய பிரசன்னம் ஆலயத்தில் மட்டுமல்ல, அவரை நேசிக்கும அனைவருக்கும் கிடைக்கும். நம் சரீரமே தேவனுடைய ஆலயம் என்று வேதாகமம் கூறுகிறது.
"நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?"
1 கொரிந்தியர் 3:16
தேவன் நம்மிடையே வாசம் செய்கிறார் என்பதை அறிந்து, ஒவ்வொரு கணமும் தேவனுடைய பிரசன்னத்தால் நாம் நிரப்பப்பட்டிருக்க விரும்ப வேண்டும். இவ்வுலகில் நாம் விரும்புவது எதுவும் நம்மிடத்தில் இருந்தாலும், இல்லாவிட்டலும் தேவ பிரசன்னம் நமக்கு அவசியம் தேவை.
"...இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்."
மத்தேயு 18:20
[Strong's concordance:
8033. sham - there, thither]

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...