இயேசுவே நம் போதகர்
Teacher
Greek: ரபீ/ ரப்போனி (Rabbi)
“...ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்."
யோவான் 3:2
இயேசு அவரது சீஷர்களான பேதுரு, நாத்தான்வேல், யூதாஸ் மற்றும் மேலே உள்ள வசனத்தை கூறிய நிக்கோதேமு உட்பட சிலரால் ஆசிரியர் என்று பொருட்படும் “ரபீ” என்று அழைக்கப்பட்டார். யோவான் ஸ்நானகனின் சீஷர்களும் அவரை “ரபீ” என்று அழைத்தனர். இயேசுவின் நாட்களில் இது தோராவைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான கௌரவப் பட்டமாகப் பயன்படுத்தப்பட்டது.
"இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு, என்ன தேடுகிறீர்கள் என்றார், அதற்கு அவர்கள் : ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்: ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்."
யோவான் 1:38
'rav-i' அல்லது ‘rabbi’ என்றால் ‘my master’ என்று பொருள். யூத வரலாற்றில் – ஹலேல், ஷமாய் போன்ற பல ரபீக்கள் இருந்தனர், அவர்கள் இயேசுவின் காலகட்டத்தில் பிரபலமானவர்கள். இந்த தலைப்பு இந்தியாவில் உள்ள ஒரு 'முனிவர்' அல்லது 'குரு'வைப் போன்றது, அவர்கள் 'சிஷ்யர்கள்' அல்லது சீடர்கள் என்று அழைக்கப்படும் மாணவர்களை வழிநடத்துவார்கள். அவர்கள் கற்கும் இடம் "குருகுலம்" என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பள்ளி அல்லது கல்லூரி போன்றது அல்ல, அங்கு ஒரு மாணவருக்கு பல ஆசிரியர்கள் இருப்பார்கள், ஆனால் இந்த முறையில் குரு ஒருவர் மட்டுமே இவர்களுக்கு ஆசிரியர். ஒருமுறை இயேசுவே தன்னை தனது சீஷர்களின் "குரு" என்று குறிப்பிடுகிறார்.
"நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள், கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்."
- மத்தேயு 23:10
அவர் எங்கு சென்றாலும் சீஷர்கள் அவர் பின் செல்வார்கள், அவர் சொல்வதைக் கேட்பார்கள், அவருடைய போதனைகளைப் பின்பற்றுவார்கள், அவருடைய கொள்கையைப் பரப்புவார்கள், அவருடைய ஊழியத்தில் அவருக்கு உதவுவார்கள். இது நற்செய்திகளில் பிரதிபலிப்பதைக் காண்கிறோம்.
"சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல. சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும்..."
மத் 10:24,25
"சீஷன்" என்ற வார்த்தையின் அர்த்தம், "கற்பவர் அல்லது மாணவர்" ஆகும். இயேசுவை நம் ரபீயாக நாம் மதித்தால், அது கீழ்ப்படிதலுடன் இருக்க வேண்டும்.
- ரேமா ஜாய் ஷரத்
[Strong's Greek
4461. rhabbi - Rabbi, my master, teacher; a title of respect often applied to Christ.
1320. didaskalos - an instructor]
No comments:
Post a Comment