யேகோவா டோவ்
Jehovah Tov
பொருள்: "கர்த்தர் நல்லவர்"
God is good
"கர்த்தர் நல்லவர்" என்பதை கிறிஸ்தவ வட்டாரங்களில் அடிக்கடி கேட்கிறோம். இது நம் பாடல்கள், பிரசங்கங்களிலும், சில சமயங்களில் நம் வாழ்வில் நல்லதோ கெட்டதோ, எது நடந்தாலும் ஒரு பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. கர்த்தர் நம் தேவைகளை சந்திக்கிறார், நம்மை வழிநடத்துகிறார், நம்மைப் பாதுகாக்கிறார்... ஆனால் "யேகோவா டோவ்" அதை விட ஆழமான அர்த்தம் கொண்டது.
கர்த்தர் நன்மையாகவே இருக்கிறார். தேவனுடைய நன்மையை ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் காணலாம். நன்மையான காரியங்கள் நம் வாழ்வில் நிகழும்போது மட்டும் அவருடைய நன்மையைப் பற்றி நாம் நினைத்தாலும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் நம்மைச் சுற்றியுள்ள மிகச் சிறிய விஷயங்களில் கூட அவருடைய நன்மை எல்லா நேரத்திலும் நிறைந்துள்ளது.
"நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது..."
- யாக்கோபு 1:17
ஆதியாகமம் ஒன்றாம் அதிகாரத்தில், "தேவன் அது நல்லது என்று கண்டார்" என்று பலமுறை எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். நம்மைப் படைத்த தேவனுக்கு நம்மை மதிப்பிட உரிமை உண்டு. அவர் உருவாக்கின எல்லாவற்றையும் மதிப்பிட்டு, அது நல்லது என்று தீர்மானித்தார்.
"அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது..."
ஆதியாகமம் 1:31
"கடவுள் நல்லவராக இருந்தால், அவர் ஏன் தீமையை உருவாக்கினார்?" என்று பலர் கேட்கிறார்கள். கடவுள் தீமையை படைக்கவில்லை. மாறாக, தீமை என்பது நன்மை இல்லாத ஒன்று; தேவன் இல்லாத இடம் எதுவோ அங்கே இருள் இருக்கும். தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லை என்று இயேசு கூறுகிறார். நன்மை என்பது தேவனுடைய தன்மைகளில் ஒன்று, அவர் தீமையான எதையும் செய்ய மாட்டார். அவரைப் போல, நாமும் தீமைக்கு விலகி, நம்மால் முடிந்த நன்மைகளைச் செய்வோம்!
"தீமையை விட்டு விலகி, நன்மை செய், என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்."
சங்கீதம் 37:27
[Strong's concordance:
2896. towb - pleasant, agreeable, good]
No comments:
Post a Comment