"நசரேயனாகிய இயேசு"
Jesus the Nazarene
"(யோசேப்பு) நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். (இயேசு) நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது."
மத்தேயு 2:23
கிறிஸ்து நசரேயன் என்று அழைக்கப்படுவார் என்று பழைய ஏற்பாட்டில் உள்ள எந்த தீர்க்கதரிசன புத்தகமும் நேரடியாகக் கூறவில்லை. ஆனால் “netser” என்ற எபிரேய சொல்லுக்கு கிளை அல்லது துளிர் என்று பொருள். ஏசாயா 11:1 இல் "ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்" என்று எழுதப்பட்டிருக்கிறது.
மத்தேயு இந்த வசனத்தை வைத்து "நசரேயன்" என்று குறிப்பதாக பல வேத அறிஞர்கள் கருதுகின்றனர். இயேசு கலிலேயாவில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் வளந்தார்; அவரே தீர்க்கதரிசிகளால் கணிக்கப்பட்ட கிளை - netser. அவர் வளர்ந்த நகரத்தின் பெயரும் நாசரேத்: netser என்ற வார்த்தையைப் போலவே ஒலிக்கிறது.
"அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்."
யோவான் 1:46
சமூகத்தில் தாழ்ந்த மற்றும் நிராகரிக்கப்பட்ட ஒரு நபரைக் குறிக்கவும் "Nazarene" என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். இன்றும் அரபியர்கள் கிறிஸ்தவர்களை இந்த சொல்லை வைத்து அழைக்கிறார்கள். நாசரேத் எருசலேமுக்கு வடக்கே 55 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய நகரம், அது யூதர்களுக்குள் கீழ்த்தரமாகப் பார்க்கப்பட்டது. கலிலேயர்கள் பொதுவாக யூதர்களால் இழிவாகப் பார்க்கப்பட்டனர், அதிலும் குறிப்பாக நாசரேத்தை வெறுத்தார்கள்.
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவருமாயிருந்தார்.
(ஏசாயா 53:3)
இயேசு இவ்வுலகத்திற்கு ஒரு சாதாரண மனிதனாக தன்னைத் தாழ்த்தி வந்தது மட்டுமல்லாமல், தன்னை பூமியில் தாழ்த்தப்பட்டவர்களுடன் சேர்த்துக்கொண்டார். ஒரு சிறுமையான, வெறுக்கப்பட்ட நகரத்தில் வளர்ந்தது அவரது ஊழியத்தின் முக்கிய பகுதியாக செயல்பட்டது.
[Strong's Hebrew:
5342. netser - a sprout, shoot
Greek
3478. Nazara - Nazareth, a city in Galilee]
No comments:
Post a Comment