இயேசு, நம் மூத்த சகோதரன்
Jesus is our Elder Brother
யோவான் 20:17 இல், உயிரத்தெழுந்த இயேசு மரியாளிடம் "... நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு" என்றார்.
"எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள். இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன்..."
எபிரேயர் 2:11, 12
இயேசு பிதாவுக்கு முதற்பேறானவர் என்பதாலும், நாம் அனைவரும் ஆவிக்குறிய ரீதியில் பிதாவின் பிள்ளைகள் என்பதாலும், இயேசுவை நம் மூத்த சகோதரன் என்று நாம் அழைக்கலாம்.
"தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்."
ரோமர் 8:29
"சகோதரன்/சகோதரி" என்ற சொல் இரத்த சம்பந்தமுடைய ஒருவரைக் குறிக்கப் பயன்படுகிறது. ஆனால், நம்முடைய மூத்த சகோதரனாகிய இயேசு கிறிஸ்துவினால் கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு பொதுவான வார்த்தையாக மாறிவிட்டது, அவருடைய சொந்த இரத்தத்தால் நம்மை மீட்டெடுத்துள்ளார். கிறிஸ்துவுக்குள் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்.
"உடன்பிறப்பு" என்பது அதே கருப்பையை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் ஒருவர். ஒரு குழந்தை பிறக்கும் போது, அதன் மூத்த அண்ணன்/அக்காவைப் போலவே அதே பெற்றோர், வீடு, சொத்தைப் பகிர்ந்து கொள்கிறது. அதேபோல், ஒரு நபர் "மீண்டும் பிறக்கும்" போது, பிதா நம் தந்தையாகிறார், மேலும் இயேசுவுக்குச் சொந்தமான அனைத்தும் நமக்கும் சொந்தமாகிறது. கிறிஸ்துவின் சகோதரனாகவோ அல்லது சகோதரியாகவோ இருப்பதற்கான தகுதி பிதாவின் சித்தத்தை செய்வதே.
"தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும்,எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்."
மாற்கு 3:35
No comments:
Post a Comment