ஒரேபேறான குமாரன்
Only begotten son
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."
யோவான் 3:16
கிரேக்க மொழியில் "ஒரேபேறான குமாரன்" என்பதை ‘monogenes’ [மோனோஜீனஸ்] என்று எழுதியுள்ளார் யோவான். இது இரண்டு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆபிரகாமுக்கு ஆகார் மற்றும் கேத்தூராள் மூலம் மற்ற மகன்கள் இருந்தபோதிலும், ஈசாக்கு மட்டுமே தேவனால் "ஏகசுதன்" என்று குறிப்பிடப்பட்டார். (ஆதி 22:2). சாராளின் கர்பப்பிறப்பாகிய ஈசாக்கு மட்டுமே உடன்படிக்கையின் படி ஆபிரகாமின் ஒரேபேறான குமாரன். இந்த வகை "மோனோஜீனஸ்", உறவால் பிணைக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது "மோனோஜீனஸ்" தனித்துவமான மற்றும் ஒரே வகையான, ஒரு நபரைக் குறிக்கிறது [Unique, one of a kind].
கன்னி மரியாளின் வயிற்றில் பரிசுத்த ஆவியினாலே உறுவான இயேசு கிறிஸ்து மட்டுமே தேவனுடைய ஒரேபேறான குமாரன், மற்ற அனைத்து விசுவாசிகளும் சுவிகாரப்புத்திரர்கள். [Sons through adoption] (எபே 1:6)
"தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது."
1 யோவான் 4:9
இந்த பிதா-குமாரன் உறவை நாம் மனித உறவைப்போல பார்க்கக்கூடாது. பிதா ஒருவரைத் திருமணம் செய்து இயேசுவைப் பெற்றெடுக்கவில்லை, மாறாக மனித ரூபத்தில் வெளிப்பட்ட வார்த்தையானவரே "தேவக்குமாரன்" என்னப்படுகிறார்.
உதாரணமாக: யோவான் 17:12 - ல் யூதாஸ்
"கேட்டின் குமாரன்" என்று அழைக்கப்படுகிறான், யோவான் 6:71 - ல் அவன் "சீமோனின் குமாரன்" என்று அழைக்கப்படுகிறான். யூதாஸை "கேட்டின் மகன்" என்று சொல்வதன் மூலம், அவன் கேட்டிற்கு பிறந்தான் என்று அர்த்தமல்ல, ஆனால் அது அவனது வாழ்க்கையை விளக்குகிறது – அவன் கேட்டின் வெளிப்பாடு. அதேபோல், இயேசு தேவனுடைய மகன் என்று சொல்வதன் மூலம் – இயேசுவே தேவன் என்று அர்த்தம். அவர் மனித வடிவில் வெளிப்பட்ட தேவன்.
"தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்."
யோவான் 1:18
[Strong's Greek:
3439. monogenés - only, only-begotten; unique.]
No comments:
Post a Comment