Tuesday, October 15, 2024

பிந்தின ஆதாம்

பிந்தின ஆதாம்

Last Adam
[Greek: eschatos Adam]
தேவனால் படைக்கப்பட்ட முதல் மனிதன் (முந்தின) ஆதாம் என்று ஆதியாகமம் நமக்குக் கற்பிக்கிறது. "பிந்தின ஆதாம்" என்ற தலைப்பு புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும்.
"அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது. பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது. ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன். இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே. வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே."
1 கொரிந்தியர் 15:45-48
மனிதகுலத்தின் தந்தையாகிய ஆதாம் மூலம் நமக்கு பாவம், பயம், பாடுகள், மரணம், துக்கம், நோய், போன்றவை உலகிற்குள் நுழைந்தது. அவரிடமிருந்து பிறந்த அனைவரும் பாவிகள் என்று அழைக்கப்பட்டனர். இருப்பினும், தேவன் ஸ்திரீயின் வித்தாகிய இயேசு கிறிஸ்துவை வாக்குத்தத்தம் அளித்தார். ஆதாம் ஒரு வகையில் தேவனுடைய குமாரன் என்றாலும், இயேசு பிதாவின் ஒரே பேரான குமாரன். இரண்டாவது ஆதாமாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தபலியின் மூலம் நாம் அனைவரும் நித்திய ஜீவனைப் பெற்றுள்ளோம்! இனி பயம் வேண்டாம், நம் துக்கமெல்லாம் சந்தோஷமாக மாறும், பூரண சுகத்துடன் வாழலாம்! பாடுகள் மத்தியிலும் இயேசு நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு வாழலாம்! கிறிஸ்து மட்டுமே ஒரு பாவியின் மரித்த இருதயத்தை உயரடையச் செய்ய முடியும்.
"இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின."
2 கொரிந்தியர் 5:17

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...