Tuesday, August 27, 2024

யேகோவா நாகாட்

யேகோவா நாகாட்

Jehovah Nagad
பொருள்: எதிர்காலத்தை முன்னறிவிக்கும் தேவன்
God who predicts the future
"பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின, புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன், அவைகள் தோன்றாததற்குமுன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்."
ஏசாயா 42:9
தீர்க்கதரிசனங்கள் மூலம் எதிர்காலத்தை முன்னறிவிக்கும் "தீர்க்கதரிசிகள்" பலரை வேதாகமத்தில் கண்டுள்ளோம். நோஸ்ட்ராடாமஸ், பாபா வாங்கா போன்ற பல பிரபலமானவர்களை உலகம் அறியும். சவுல் சந்தித்த எந்தோரின் அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயைப் போன்ற தீயவர்களும் உள்ளனர்.
நிச்சயமற்ற இவ்வுலகில், பலர் ஜோதிடர்களைத் தேடுகிறார்கள், ஆர்வமாக தங்கள் தினசரி ஜாதகத்தைப் படிக்கிறார்கள், அதை நம் தேவன் முற்றிலும் வெறுக்கிறார்!!!
எல்லா ஜோசியர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் நட்சத்திரம் பார்க்கிறவர்களும் எரிக்கப்படுவார்கள் என்றும், தேவனுடைய கோபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்றும் ஏசாயா 47:13-15 தெளிவாகக் கூறுகிறது. வேதாகமத்திலிருந்து, ஜோதிடம் பாபிலோனிலிருந்து (கல்தேயர்கள்) உருவானது என்பதை உறுதிப்படுத்த முடியும், எனவே இது பாகால் கலாச்சாரத்தோடு சம்பந்தப்பட்டதாகும்.
எல்லா ஆவியையும் நம்ப வேண்டாம், கிறிஸ்தவத்தில் கூட பல தவறான ஆவிகள் இருப்பதால் அவற்றைச் சோதித்து அறியவும் தேவன் நம்மை எச்சரிக்கிறார். நாம் தேவனை நேசித்தால் எல்லாம் நமக்கு சாதகமாக நடக்கும் என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் விசுவாசிக்க வேண்டும்.
எதிர்காலத்தைப் பற்றிய பயம் நமக்கு இருக்க வேண்டாம். எப்போது, எங்கு, என்ன நடக்கும் என்பது தேவனுக்கு மட்டுமே தெரியும் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்" என்று தேவன் எரேமியா 33:3-இல் கூறுகிறார்.
"நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே."
- எரேமியா 29:11
[Strong's Hebrew:
5046. nagad: to make known, to demonstrate or to sensitize]

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...