Tuesday, August 27, 2024

யேகோவா நிசி

யேகோவா நிசி

Jehovah Nissi
பொருள்: கர்த்தரே நம் ஜெயக்கொடி
God is our Banner
"மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி..." என்று பேரிட்டார். (யாத் 17:15)
இஸ்ரவேலர்கள் வனாந்தர யாத்திரையில் தேவனுக்குள்ளாக வளர்ந்ததால், அவ்வப்போது அவர்கள் அவரை அழைத்த பெயர்களும் மாறின. யாத்திராகமம் 17-இல் இஸ்ரவேலர்கள் அமலேக்கியர்களால் தாக்கப்பட்டனர். மோசே தனது கோலை உயர்த்தும் போதெல்லாம் இஸ்ரவேல் வீரர்கள் மேற்க்கொண்டனர், இறக்கும் போதெல்லாம் அவர்கள் தோற்றனர். யோசுவா அமலேக்கியருடன் போரிட்டு வெற்றி பெறும்வரை ஆரோனும் ஊரும் மோசேவின் கைகளை தாங்கி உயர்த்தினர். போரில் வெற்றி பெற்ற பிறகு, மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி அதை "யேகோவா நிசி" என்று அழைத்தார். தேவன் தம்முடைய ஜனங்களுடன் வாசம்பண்ணுகிறாரென்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று மோசே விரும்பினார்.
இஸ்ரவேல் வென்றது இராணுவ வீரர்களாலோ அல்லது போர் திட்டங்களாலோ இல்லை; அவர்கள் தேவனுடைய வல்லமையால் வென்றனர். இஸ்ரவேல் கர்த்தருடைய பாதுகாப்பின் கீழ் இருந்தது, அவருடைய உதவியால் இஸ்ரவேலர்கள் போரிட்டனர், அவருடைய நாமத்தினாலும் பலத்தினாலும் அவர்கள் வெற்றி பெற்றனர்.
'நிசி' என்ற எபிரேய வார்த்தை NES என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதன் பொருள் "கொடி/அடையாளம்" ஆகும்.
கிறிஸ்தவர்களாகிய நாமும் நமது வாழ்வில் கர்த்தரின் கொடியை ஏந்துபவர்களாய் வாழவேண்டும். நம்முடைய சூழ்நிலைகள் எவ்வளவுதான் கடினமாகத் தோன்றினாலும் தேவன் நம் மத்தியில் வாசம்பண்ணுகிறார்.
"தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்."
1 யோவான் 5:4
[Strong's Hebrew:
5251. nes: a standard, ensign, signal, sign]

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...