யேகோவா நேரி
Jehovah Neri
பொருள்: கர்த்தரே என் விளக்கு
The Lord is my lamp
இன்று பலர் “என் எதிர்காலம் இருளாகிவிட்டது. என் தொழில் இருண்டு கிடக்கிறது. எனது ஊழியத்தில் ஒளி இல்லை. எனது திருமண வாழ்க்கையில் எந்த பிரகாசத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கையில் ஒளியே இல்லை” என்று கூறுகிறார்கள். வெளிச்சத்திற்காக ஏங்குகிறவர்களுக்கு தேவன் நம்பிக்கை அளிக்கும் விதமாக 2 சாமுவேல் 22:29-இல்: “கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர். கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்" என்று எழுதுகிறார்.
ஒளி நன்மையைக் குறிக்கிறது. தேவனுடைய விளக்கு நம் உலகத்தை பிரகாசமாக்குகிறது. கர்த்தரின் கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி. இந்த இருளான உலகில் அவைகள் நம்மை சரியான பாதையில் வழிநடத்தும்.
"உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது."
சங்கீதம் 119:105
கர்த்தரைப் பார்த்தவர்களின் முகங்கள் அனைத்தும் பிரகாசமடைவதாக வேதாகமம் கூறுகிறது. இன்று முதல், மனிதர்களின் முகத்தைப் பார்க்காமல், தேவனுடைய முகத்தை நோக்கிப் பாருங்கள்.
"தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை..."
1 யோ 1:5
யோவான் 3:19-21 இல், சத்தியத்தை விரும்பும் அனைவரும் வெளிச்சத்திற்கு வருவார்கள் என்றும், பொல்லாதவர்கள் இருளை விரும்புகிறார்கள் என்றும் கூறுகிறது. இந்த வெளிச்சம் இயேசுவைக் குறிக்கிறது; இருள் உலகத்தின் இச்சைகளைக் குறிக்கிறது. இருள் மறைத்து மூடுகிறது, ஒளி உண்மையை வெளிப்படுத்துகிறது. ஒளியை அனைவராலும் பார்க்க முடியும். ஒளி சக்தி வாய்ந்தது மற்றும் தொலைநோக்குடையது, எல்லாவற்றையும் ஒளிரச் செய்யும் திறன் கொண்டது. நாம் தேவனைத் தேடும்போது, அவரைக் கண்டடைவோம். நம் அன்றாட வாழ்வில் சத்தியத்தைக் கண்டடைவதற்கு அவர் உதவுவார். கிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியின் வல்லமையாலும், நாம் தினமும் வாழ்க்கையின் வெளிச்சத்தில் நடக்கிறோம். அவருடைய ஒளி நமக்கு ஞானத்தைத் தருகிறது.
"அஸதோ மா ஸத்கமய"
அவருடைய வார்த்தை மட்டுமே நம்மை இருளில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்!
Strong's Hebrew:
5216. ner - a lamp
4501. menorah - lampstand
(Neri, Neriah are Biblical names signifying lamp, light of God)
No comments:
Post a Comment