Tuesday, August 27, 2024

யேகோவா காடோஷ்

யேகோவா காடோஷ் / மிக்காதிஷ்கேம்

(Jehovah Kadosh / Mekaddishkem)
பொருள்: பரிசுத்த தேவன் / பரிசுத்தமாக்குகிற கர்த்தர்
(Holy God / The Lord who sanctifies)
"...உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்."
லேவி 19:2
"...என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள், நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்."
லேவி 20:8
எபிரேயத்தில் “qadosh" என்றால் "பரிசுத்தம் / புனிதம்" என்று பொருள். இது தேவனுடைய இயல்பு. சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது.
தேவன் தனக்கென ஒரு கூட்டம், மலை, மொழி, தேசம் மற்றும் பங்கை "பிரித்தெடுத்து" அனைத்தையும் "தனது சொந்தம்" என்று அழைக்கிறார். உதாரணமாக, தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதை "பரிசுத்தமாக்கினார்". தேவனுக்கு சொந்தமான எதையும் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
தேவனுடன் தனிப்பட்ட உறவைக் கொண்டவர்களாகிய நாம் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். பரிசுத்தமாக்குதல் என்றால் பாவமில்லாமல் இருப்பது மட்டும் இல்லை. வித்தியாசமாகப் பார்க்கவும், வாழவும், அவருடைய கட்டளைகளின்படி நடந்து கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறோம். நாம் அணியும் உடைகள், பேசும் விதம், கேட்கும் இசை, உண்ணும் உணவு, பார்க்கும் படங்கள் போன்றவை தேவனுடைய பார்வையில் "பரிசுத்தமாக" இருக்க வேண்டும்.
பரிசுத்தம் என்பது ஒரு வெளிப்புறச் செயல் மட்டுமல்ல, அது பரிசுத்த ஆவியானவரின் உள்ளார்ந்த கிரியையின் விளைவாகும். நம்முடைய செயல்களால் நாம் பரிசுத்தமாகிவிடவில்லை, நம்மை பரிசுத்தமாக்குபவராகிய கர்த்தராகிய யேகோவா மிக்காதிஷ்கேம் நம்மை பரிசுத்தமாக்குகிறார்.
"இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்."
- ரோமர் 6:22
Strong's Hebrew:
6918. qadosh - sacred / holy
(mə·qad·diš·ḵem)
6942. qadash - to be set apart / consecrated

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...