Tuesday, August 27, 2024

யேகோவா மாக்கே

யேகோவா மாக்கே / நாக்கா

(Jehovah Makkeh / Nakah)
பொருள்: சிட்சிக்கும் தேவன் / அடிக்கிறவராகிய தேவன்
(God who smites)
"...உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும், அப்பொழுது அடிக்கிறவராகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்."
எசேக்கியேல் 7:9
பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேலைத் திருத்துவதற்காக தேவன் தண்டிக்கும் பல நிகழ்வுகளை நாம் தொடர்ந்து பார்க்கிறோம்.
தேவனுடைய இந்த சுபாவம் நிறைய பேருக்கு பிடிக்காத அல்லது பேச விரும்பாத ஒன்று. ஆனால் தேவன் எப்படி இருக்கிறாரோ, அப்படிதான் நாம் அவரை அறிந்துக்கொள்ள வேண்டும். நாம் அவருடைய ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து மறுபக்கத்தை புறக்கணிக்க முடியாது. ஒரு தந்தை தனது மகனை சிறந்த மனிதனாக மாற்றுவதற்காக மட்டுமே தனது மகனின் தவறுகளை சரிசெய்வார். எபிரெயர் 12:6,11 கூறுகிறது,
• "கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்..."
• "எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்."
எபிரேயர் 12:11
தேவனுடைய கடிந்துகொள்ளுதல் நமக்கு நல்லது, அப்படிப்பட்ட ஒழுக்கம் இருந்தால்தான் அவருடைய பரிசுத்தத்தில் நாம் பங்கு கொள்ளமுடியும்.
தேவன் உங்களைத் திருத்த முயலும்போது ஒருபோதும் அவரைக் கைவிடவோ, கோபப்படவோ கூடாது. நம் இருதயத்தின் கண்களைத் திறந்து, அவர் வாழ்க்கையில் நமக்குக் கற்பிக்க முயற்சிக்கும் பாடத்தை பொறுமையுடன் கற்றுக்கொள்ள வேண்டும்.
mak·keh
[Strong's Hebrew]
5221. nakah- to smite

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...