Tuesday, August 27, 2024

யேகோவா ஹாக்காக்

யேகோவா ஹாக்காக்

[Jehovah Chaqaq]
பொருள்: கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர்
[God is our Law-giver]
"கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்."
ஏசாயா 33:22
தேவன் மனிதனை படைக்கும்போது தனது சாயலாகப் படைத்தார். மோசேக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கடப்படுவதற்கு முன்பே ஏனோக்கு, நோவா, ஆபிரகாம் போன்ற சில மனிதர்கள் தேவனுடன் நடந்ததை நாம் காணலாம். ஒரு நண்பனுடன் பேசுவதைப் போல இவர்கள் தேவனோடு உறவாடியதால், அவருக்கு கட்டுப்பட்டு மனசாட்சியுடன் வாழ்ந்தார்கள்.
பறவைகள், விலங்குகள், தேவ தூதர்கள் உட்பட - அவரது அனைத்து படைப்புகளுக்கும் தேவன் அடிப்படை சட்டமியற்றுபவர் என்பதை யோபு, சங்கீதம் போன்ற புத்தகங்கள் உறுதிப்படுத்துகின்றன. மனிதனும், தேவனுடைய படைப்பாக இருப்பதால், அவனும் தேவனுடைய கட்டளைகளுக்கு உட்பட்டவன்.
பழைய ஏற்பாட்டில் மொத்தம் 613 கட்டளைகள் உள்ளன - அந்த விதிகளை முழுவதும் எந்த மனிதனாலும் எளிதாகக் கடைப்படிக்க முடியாது. 10 கட்டளைகளைப் பின்பற்றுவது கூட கடினம். தேவனைப் பிரியப்படுத்துவதை விட சுய ஆசைகளை நிறைவேற்றவே நம் இதயங்கள் பெரும்பாலும் முனைகின்றன.
அதனால்தான் இயேசு வரும்வரை பாவமற்ற மனிதன் ஒருவன்கூட பூமியில் இருந்ததில்லை. இயேசு நமக்கான நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்தார். "தேவனை நேசி, பிறனை நேசி" என்ற கருத்தில் இயேசு முழு நியாயப்பிரமாணத்தையே சொல்லிவிட்டார்! "நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்,
அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்." என்று மத்தேயு 5:17-இல் கூறுகிறார்.
"...நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்..."
- எரேமியா 31:33
Strong's Hebrew:
2710. chaqaq - to cut in, inscribe, decree
(mə·ḥō·qə·qê·nū)

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...