Tuesday, August 27, 2024

ஜீவத்தண்ணீரின் ஊற்று

 "ஜீவத்தண்ணீரின் ஊற்று"

Fountain of Living waters
யோவான் 4-ஆம் அதிகாரத்தில், நண்பகல் நேரத்தில் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வரும் சமாரிய ஸ்திரீயைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. அவளது கசப்பான கடந்த கால பாவங்களால், மற்ற பெண்களைப் போல அதிகாலையில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. யாருமே அவளுடன் உரையாட விரும்பவில்லை.
யூதர்கள் சமாரியர்களிடம் பேசாமல் இருந்தபோதிலும் இயேசு தம் வழியிலிருந்து விலகி அவளிடம் பேசினார். அவள் இதயத்தில் இருக்கும் வலியை இயேசு கண்டார். அவள் அமைதியாக இருக்க முயன்றும், தோல்வியடைந்த அவளது ஆத்துமாவின் வறண்ட இடங்களை அவரால் பார்க்க முடிந்தது. அவள் இதயத்தை உலகம் தரும் காரியங்களால் நிரப்ப முயற்சிப்பதை அவரால் பார்க்க முடிந்தது.
பின்பு அந்த ஸ்திரீ அவரை நோக்கி: "கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்" என்றாள். அதற்கு இயேசு: "உன்னுடனே பேசுகிற நானே அவர்" என்றார்.
அவள் உடனடியாக தனது தண்ணீர் குடத்தை விட்டுவிட்டு, தன் நகரத்தாரிடம் ஓடி சுவசேஷத்தை அறிவித்தாள். அந்நாளில் பலர் அவர் மீது நம்பிக்கை வைத்தனர்.
தேவன் சமாரியாவில் உள்ள பெண்களில் ஒதுக்கி வைக்கப்பட்டவளைத் தேர்ந்தெடுத்தார். அவள் மூலம் பல ஆத்துமாக்கள் காப்பாற்றப்பட்டன. அந்தப் பெண் ஒரு கிணற்றில் இருக்கும் தண்ணீரைத்தான் தேடி வந்தாள், ஆனால் இயேசு ஜீவத்தண்ணீரையே வழங்கினார். தேங்கி நிற்கும் கிணற்று நீரை விட, அசைந்து, கூழாங்கற்களின் மேல் விழுந்து, நகர்ந்து, ஓடிவரும் ஜீவத்தண்ணீர் சிறந்தது. அதேப்போல், மதத்தை பின்பற்றுவதைவிட தேவனோடு நாம் வைக்கும் உறவே சிறந்தது. இன்று உங்கள் கிணற்றில் தேவன் உங்களைச் சந்திப்பார் என்று விசுவாசிக்கிறேன். தேவன் யார், நீங்கள் அவருக்கு யார் என்ற சத்தியத்தை அறிந்து, உங்கள் தண்ணீர் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு மற்றவர்களுக்கு தேவனைப்பற்றி சொல்லும் அளவுக்கு ஆழமான, தனிப்பட்ட முறையில் நீங்கள் அவருடன் உறவாட தீர்மானியுங்கள்!
"வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்."
யோவான் 7:38
[Maqowr Chay Mayim: மகோர் சய் மயிம்]

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...