யேகோவா கோசி
Jehovah Kosi
பொருள்: "கர்த்தரே என் பாத்திரம்"
The Lord is my cup
வேதத்தில் "பாத்திரம்" என்ற வார்த்தையை அடிக்கடி சங்கீதங்களில் பார்க்கிறோம்.
ஆங்கிலத்தில் 'Cup' (கப்) என்று எழுதப்பட்டிருக்கும். Coffee Cup அல்ல, இது தண்ணீர் அல்லது திராட்சை ரசம் குடிக்கக்கூடிய ஒரு பாத்திரம். கர்த்தருடைய கோபம், ஆசீர்வாதம், பந்தி போன்ற விஷயங்களைக் குறிக்க குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.
"பாத்திரம்" ஒரு நபரின் வாழ்க்கையின் விதியை பிரதிபலிக்கிறது. தேவன் அவர்களுக்காக வைத்திருக்கும் நோக்கத்தை / திட்டத்தை குறிக்கிறது.
தேவன் எல்லோருக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். வாழ்க்கை என்பது ஒரு நாடகம் போன்றது, அதில் நாம் இயக்குனரால் கொடுக்கப்பட்ட எந்த பாத்திரத்திலும் நடிக்க வேண்டும்! தேவன் நமக்கு எதை வழங்குகிறாரோ அதையே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரை நேசிப்பவர்களுக்கு அது ஆசீர்வாதத்தால் நிறைந்துள்ளது. பொல்லாதவர்களுக்கு அது கோபமும் நியாயத்தீர்ப்பும் நிறைந்தது. இயேசு தம்முடைய மாம்சத்தை புசிக்கவும் அவருடைய இரத்தத்தை பானம்பண்ணும்படியும் சொன்னார். இயேசுவே நம்முடைய சுதந்தரம் (மாம்சம்) மற்றும் நம் பாத்திரம் (இரத்தம்).
"என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்."
மத்தேயு 26:39
இயேசு பிதாவின் சித்தத்திற்கு முழுமையாக சமர்ப்பித்தார். இன்பமோ, துன்பமோ, நிறைவோ, குறைவோ, கர்த்தருடைய பாத்திரத்தையே எதிர்ப்பார்த்து காத்திருப்போம்!
No comments:
Post a Comment