தேவனுடைய ஈவு
(கிரேக்கம்: dōrean tou Theou)
வசனம்: "இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்."
-யோவான் 4:10
"...அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்."
மத்தேயு 5:45
அதற்கு பதிலாக தேவன் நம்மிடம் எதையும் கேட்பதில்லை.
இந்தியர்கள் "மொய்" என்று அழைக்கும் வழக்கத்தின்படி அதே மதிப்பை எதிர்பார்த்து பரிசளிப்பவர் அல்ல! தேவனுடைய பரிசுகள் இலவசமானவை, அவற்றை ஒருபோதும் அவர் விற்பதில்லை.
மனித இனத்திற்கு தேவனின் மிகப்பெரிய ஈவு அவரது ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்து.
இயேசு தேவனுடைய குமாரனாக பரலோகத்தில் தனது சிங்காசனத்தை விட்டுவிட்டு, பூமியில் ஒரு தாழ்மையான மனிதரனாக வாழ்ந்தார் – அவர் மிகவும் தாராளமான ஒரு நபராக மாறினார். அவர் ஒரு மனிதனாக வந்தது மட்டுமல்லாமல், நமக்காக மறித்தார், மேலும் அவர் – ராஜாவாக திரும்பி வரும்போது அவருடன் ஆட்சி செய்யும் வாய்ப்பையும் நமக்குத் தருகிறார். இந்த ஈவு இணைற்றது.
இந்த ஒரு வரம் மூலம் அதனுடன் வரும் பிற வரங்களையும் நாம் பெறுகிறோம்:
• பரிசுத்த ஆவியானவரின் வரம்
• நித்திய ஜீவனின் வரம்
• இரட்சிப்பின் வரம்
• நீதியின் வரம்
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."
யோவான் 3:16
No comments:
Post a Comment