Wednesday, April 17, 2024

காலெ ரசின்

காலெ ரசின்

Galeh Razin


பொருள்: மறைப்பொருள்களை வெளிப்படுத்துபவர்
(Revealer of secrets)
வசனம்: "ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்."
- தானியேல் 2:47
பாபிலோனில் வேறு எந்த மந்திரவாதியாலும் ஞானியாலும் கண்டுபிடிக்க முடியாத நேபுகாத்நேச்சார் ராஜாவின் கனவை தேவன் தானியேலுக்கு வெளிப்படுத்தினார். அதனால்தான் அவர் தேவனை, "மறைப்பொருள்களை வெளிப்படுத்துபவர்" என்று அழைத்தார்.
"காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை: காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை."
- நீதிமொழிகள் 25:2
அனைவருக்கும் ரகசியங்கள் உண்டு. அது தங்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைகின்றார்கள். உண்மையில், உலகில் எந்த ரகசியமும் இல்லை, ஏனென்றால் முழு பிரபஞ்சத்திலும் நடக்கும் அனைத்தையும் தேவன் அறிவார்.
தாவீது பத்சேபாளுடன் பாவம் செய்தார், பின்னர் யோவாபுக்கு கட்டளையிட்டு உரியாவைக் கொன்றார். இது பற்றி வேறு யாருக்கும் தெரியாது என்று அவர் நினைத்தார். ஆனால் தேவன் அதை தனது தீர்க்கதரிசி நாத்தானுக்கு வெளிப்படுத்தினார், அவர் பின்னர் தாவீது ராஜாவைக் கடிந்துக்கொண்டார்.
நம் தேவன் அனைத்தையும் அறிந்தவர். அவரிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது. இருளில் எது நடந்தாலும் அது வெளிச்சத்திற்கு ஒருநாள் வெளிவரும்.
அனனியாவும் அவரது மனைவி சப்பீராளும் செய்ததை பரிசுத்த ஆவியானவர் மூலம் கர்த்தர் பேதுருவுக்கு வெளிப்படுத்தினார். நாம் கர்த்தருக்குள் நடக்கும்போது, அவர் பொய்களையும் உண்மையையும் நமக்கு வெளிப்படுத்துகிறார்.
"மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள், வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்"
- உபாகமம் 29:29

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...