Wednesday, April 17, 2024

கர்த்தருடைய கரம் / விரல் என்னப்பட்டவர்

 "கர்த்தருடைய கரம் / விரல்" என்னப்பட்டவர்

("yad" yahweh)
வசனம்: "ஆவி என்னை உயர எடுத்துக்கொண்டது, நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்துபோனேன், ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது."
எசேக்கியேல் 3:14
பரிசுத்த ஆவியானவர் பெரும்பாலும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளால் "தேவனுடைய கரம்" என்று அடையாளப்பூர்வமாகக் குறிக்கப்படுகிறார் (The 10th letter of Hebrew - 'yod'). "கரம்" என்பது திசை, அறிவுறுத்தல், உதவி மற்றும் ஆறுதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் மெய்யான உதவியாளர், நம்முடைய ஆசிரியர் மற்றும் நமக்கு ஆறுதல் அளிப்பவர். மேலும், கரம்/கை என்பது திறமை, வல்லமை, கட்டுப்பாடு மற்றும் தொடுதல் ஆகியவற்றைக் குறிக்கும். இந்த வார்த்தைகள் அனைத்தும் தேவனுடைய கிரியைகளை துல்லியமாக விவரிக்கின்றன.
"வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது."
சங்கீதம் 19:1
ஆதியாகமம் 1 தேவன் பூமியை சிருஷ்டித்த நாட்களைப் பற்றி பேசுகிறது. அவர் வெளிச்சம், வானம், சமுத்திரம், வெட்டாந்தரை, செடி கொடி மரங்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பல்வேறு பறவைகள், மீன்கள் மற்றும் விலங்குகளை தன் வார்த்தையால் உருவாக்கினார். பூமி “ஒழுங்கின்மையும் வெறுமையுமாய்" இல்லாதவுடன், அவர் தனது மிகப்பெரிய படைப்பை உருவாக்கினார் - - - பூமியில் உள்ள மண்ணையும் பயன்படுத்தி தன் கைகளால் (பரிசுத்த ஆவியானவர்) மனிதனை சிருஷ்டித்தார். பூமியின் உயிரினங்கள் தேவனுடைய கைவண்ணத்தின் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை வழங்குகின்றன, அவை யாவும் மிக உயர்ந்த வடிவமைப்பை வெளிப்படுத்துகின்றன.
"நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே."
லூக்கா 11:20
மத்தேயு 12:28 இல் உள்ளதைப் போல “தேவனுடைய ஆவி” என்று எழுதுவதற்குப் பதிலாக, இந்த வசனத்தில் "தேவனுடைய விரல்" என்று லூக்கா எழுதுகிறார்.
பத்து கட்டளைகள் தேவனுடைய வரல்களால் எழுதப்பட்டவை என்று மோசே கூறுகிறார். ஒவ்வொரு கட்டளைக்கும் தேவனுடைய ஒவ்வொரு விரலையும் நினைவில் வைத்துக் கொள்வோம்.

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...