Tuesday, October 15, 2024

துக்கம் நிறைந்தவர்

"துக்கம் நிறைந்தவர்"

Man of Sorrows
[Hebrew: Ish maḵ·’ō·ḇō·wṯ]
"அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்..."
ஏசாயா 53:3
இயேசு "துக்கம் நிறைந்தவர்" என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் அவர் பிறந்த நாள் முதல் மறிக்கும் வரை பல துன்பங்களைத் தாங்க வேண்டியிருந்தது. பரலோகத்தில் தன் தெய்வீக மகிமையை விட்டுவிட்டு மனிதனாகப் பிறந்து துன்பப்பட்டார். மனிதர்கள் அனுபவிக்கும் அனைத்துப் பாடுகளையும் அனுபவித்து, அவர் எல்லாருடைய பாவத்தைத் தாங்கியவராக தேவனுடைய கோபாக்கினியை அனுபவித்தார். பாவமறியாத அவருக்கு இத்தகைய துன்பங்கள் மனதனவில் மிகவும் கடுமையானதாக இருந்திருக்க வேண்டும். மனிதர்களுடன் மனிதனாக அவர் வாழ்ந்தபோது அவருடைய நீதியுள்ள ஆவி அனுபவித்த வலியின் ஆழத்தை நம்மில் யார் புரிந்து கொள்ள முடியும்?
அவரைப்போல துயரங்களை அனுபவித்தவர் வேறொருவரும் இருக்க முடியாது. சில வேளைகளில் சந்தோஷப்பட்டாலும் பல வேளைகளில் துக்கப்பட்டார்.
இயேசு பல வலிகள், கஷ்டங்கள், துன்பங்கள் மற்றும் துக்கங்களைச் சகித்தாலும் தேவனுடைய நோக்கத்தை நிறைவுசெய்து தொலைந்த ஆடுகளை மீட்பதில் அவர் கருத்தாய் இருந்தார்.
"இயேசு அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்."
எபிரேயர் 12:2
தேவபிள்ளைகளின் கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை...!
Strong's concordance:
376. ish - man
4341. makob - pain

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...