Thursday, February 29, 2024

பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்

"என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர், பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்." - உன்னதப்பாட்டு 5:10

நம்முடைய கர்த்தராகிய இயேசு பல கோடிகளில் சிறந்தவர் என்று சொன்னால் கூட மிகையாகாது. அவர் மட்டுமே சிறந்தவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இந்த வசனத்தின் அர்த்தம் என்ன?
ஒரு நபர் தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கிறார். நமக்கு முகநூலில் 5000 நண்பர்கள் இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் followers இருந்தாலும், நமக்கென்று ஒரு நெருக்கமான வட்டம் உள்ளது, அது 100 க்கு மேல் இருக்காது.
இந்த வசனத்தில், சூளமித்தி தான் சந்தித்த அநேகரை விட தன் நேசர் சிறந்தவர் என்று கூறுகிறாள்.
"தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல, மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல" என்று இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்.
[மத்தேயு 10:37]
தேவனுடைய ஞானத்தையோ, நம் மீதான அவருடைய அன்பையோ, அவருடைய கிருபை நிறைந்த ஈவுகளையோ யாரோடும் ஒப்பிட முடியாது.
“என் வாழ்க்கையில், இயேசு பதினாயிரங்களில் சிறந்தவரா?” என்று ஒவ்வொரு கிறிஸ்தவரும் தன்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்.




No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...