யேகோவா சபாத்
Jehovah Zabad
பொருள்: "கொடுக்கின்ற தேவன்"
God who gives / bestowes
சபாத் என்றால் ‘ஈவு / பரிசு’. 'தேவனுடைய ஈவு' என்று பொருள்படும் செபதியா, செபெதேயு, யோசபாத் போன்ற பெயர்களுக்கு இதுவே வேர்ச்சொல்.
நாம் தேவனுடைய ஊழியத்தைச் செய்யும்போது, நமக்குத் தேவையான அனைத்தையும் தேவன் தருகிறார். நாம் அவருக்கு 5 அப்பம், 2 மீன்களையும் கொடுத்தால், அவர் அவற்றைப் பெருக்கி 5000 குடும்பங்களுக்கு உணவளிப்பார். வரி செலுத்த பணமில்லாதபோது, அற்புதமாக ஒரு மீனின் வாயில் ஒரு வெள்ளிப்பணத்தை இயேசுவால் உண்டாக்க முடிந்தது. உங்களுக்கு எப்போது, எப்படி, எங்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது தேவனுக்குத் தெரியும். பணத்திற்காக நாம் மனிதர்களுக்குப் பின்னால் ஓட வேண்டியதில்லை, ஏனென்றால் தேவனே நம் தேவைகளை சந்திப்பவராக இருக்கிறார்.
அதற்காக பணமே தீமையானது என்று வேதம் கூறவில்லை!
"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்."
1 தீமோத்தேயு 6:10
எந்த விதமான தீமையான வழியில் இல்லாமல், நியாயமான வழிகளில் பணம் சம்பாதிப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயேசு "கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்" என்று கூறுகிறார். மற்றவர்களுக்கு உதவ திராணி இருக்கையில் "இல்லை" என்று சொல்ல வேண்டாம். முதலாவது தேவனுக்குக் கொடுக்க வேண்டும். தேவன் தான் நமக்கு ஜீவன், சுகம், பெலன் கொடுத்து சம்பாதிக்க ஞானமும் தயவும் கொடுக்கிறவர். நீங்கள் தேவனுக்கு கொடுப்பது மிக அவசியம். ஏனெனில் உற்சாகமாய்க் கொடுப்பவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
இறுதியாக, மனிதர்களுக்கு தேவன் தந்த மிகப்பெரிய ஈவு - அவருடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்து. அவர் மூலமாக தேவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்.
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."
- யோவான் 3:16
[Strong's concordance:
2065. zebed - endowment, gift
2064. zabad - bestow upon, endow with
2066. Zabad - "he has given", the name of several Israelites]
No comments:
Post a Comment