Tuesday, August 27, 2024

யேகோவா மெஃபால்டி

யேகோவா மெஃபால்டி / பாலாட்

Jehovah Mephalti
பொருள்: "கர்த்தரே என்னை விடுவிக்கிறவர்"
God is my deliverer
வேதாகமம் விடுதலைப் பற்றிய கதைகளால் நிறைந்துள்ளது. எகிப்தியர்களிடமிருந்து இஸ்ரவேலை விடுவிக்க மோசேயையும், பெலிஸ்தியர்களிடமிருந்து விடுவிக்க சிம்சோனையும், மீதியானியர்களிடமிருந்து விடுவிக்க கிதியோனையும், மோவாபியர்களிடமிருந்து விடுவிக்க ஏகூத்தையும், யூதர்களைக் கொல்லும்படி வகைத்தேடின ஆமானின் திட்டத்திலிருந்து விடுவிக்க எஸ்தரையும் மற்றும் பலரையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தினார். அவர் மீனின் வயிற்றிலிருந்து யோனாவையும், சிங்கத்தின் குகையிலிருந்து தானியேலையும், சவுலிடமிருந்து தாவீதையும், எரிகிற அக்கினிச்சூளையில் இருந்து சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவையும் விடுவித்தார். நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
"நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார், தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர், என் தேவனே, தாமதியாதேயும்."
சங்கீதம் 40:17
மனிதன் பாவத்தில் விழுந்த நேரத்திலிருந்தே, சிலுவை மூலமாக நம்மை விடுவிக்க தேவன் ஒரு திட்டத்தை வைத்திருந்தார். அவர் நம் எதிரிகளிடமிருந்து நம்மை விடுவித்து, வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்திற்கு நம்மை அழைத்துச் செல்வார். இன்று, நாம் பெருமை, பேராசை, கோபம், பொறாமை, காமம்,பெருந்தீனி, சோம்பல் போன்ற பாவங்களில் சிக்கிக்கொண்டிருக்கலாம், கவலைகளுக்கு அடிமையாக இருக்கலாம். ஆனால், நாம் மனம்திரும்பி தேவனை நோக்கி உண்மையாக அழைத்தால், அவர் நம்மை எந்த நேரத்திலும் விடுவிக்க வல்லவராக இருக்கிறார்.
"கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்."
- சங்கீதம் 72:12
Strong's
6403. palat
ū·mə·p̄al·ṭî

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...