Tuesday, August 27, 2024

யேகோவா மிஸ்காப்

யேகோவா மிஸ்காப்

Jehovah Misgab
பொருள்: தேவன் என் உயர்ந்த அடைக்கலம்
"God is my High Tower"
எபிரேய வார்த்தையான "மிஸ்காப்" என்றால் பாதுகாப்பு, அடைக்கலம், கோட்டை, உயரமான இடம் அல்லது தங்குமிடம் என்று பொருள். நீதிமொழிகள் 18:10 - ல், "கர்த்தரின் நாமம் பலத்த துருகம்: நீதிமான் அதற்குள் ஓடிச்சுகமாயிருப்பான்" என்று வாசிக்கிறோம்.
பண்டைய நாட்களில், எரிகோ நகரத்தைப்போல தங்கள் நகரத்தை சுற்றி ஒரு பெரிய மதிலைக் கட்டி பாதுகாப்பதற்குப் பதிலாக, சில சிறிய நகரங்களில் உயரமான கோபுரத்தைக் கட்டினார்கள். இதற்குள் நகரத்தின் மக்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான உணவு, தண்ணீர், உடைகள் போன்ற அனைத்து பொருட்களும் இருக்கும் - வெள்ளம் அல்லது போர் போன்ற அவசர காலங்களில், மக்கள் பாதுகாப்பாக இருக்க இந்த கோபுரத்தை நோக்கி ஓடுவார்கள். (நியா 9:51)
கர்த்தருடைய அடைக்கலம் சாதாரண அடைக்கலம் அல்ல. அது, உயர்ந்த அடைக்கலம். "இயேசுவின் இரத்தமே" அந்த உயர்ந்த அடைக்கலம். அது, எந்த சாத்தானாலும் எட்டிப்பிடிக்க முடியாத அடைக்கலம். எந்த சங்கார தூதனாலும் நம்மைத் தொடவோ, அணுகவோ முடியாது. நம் படிப்போ, தாலந்தோ, திறமைகளோ, செல்வாக்கோ நமக்கு அடைக்கலம் தரப்போவதில்லை. கர்த்தர் ஒருவரே, நம்மை உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து, பாதுகாக்கிறவர்.
"என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்" (சங். 91:14).
[Strong's Hebrew:
4869. misgab - a secure height, retreat, stronghold]

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...