எஷ் ஒக்லா
Esh Oklah
பொருள்: பட்சிக்கிற அக்கினி
"உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்."
-உபாகமம் 4:24
அக்கினி என்றாலே என் மனதிற்கு வருவது சோதோம் கொமோரா சம்பவம்தான்!
"இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும், அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும், அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும்."
ஏசாயா 30:27
நாம் நெருப்பில் எதைப் போட்டாலும் எரித்துவிடும் அல்லது விழுங்கிவிடும். கர்த்தர் ஏன் எரிக்கிறார்? எதை விழுங்குவார்?
பதில் யாத்திராகமம் 34:14-16 இல் உள்ளது
"கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்."
எபிரேயர்களுக்கு எழுதின நிரூபத்தில், பவுல் எபிரேயர்களை கர்த்தராகிய தேவனை பயபக்தியுடன் ஆராதனை செய்யும்படி எச்சரிக்கிறார். (எபி 12:29)
ஆரோனின் குமாரர்களாகிய நாதாபும் அபியூவும் தேவனுடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது தேவனுடைய அக்கினியால் அழிக்கப்பட்டனர். (லேவி 10:2)
எலியாவின் சரித்திரத்திலும் ஏசாயா புத்தகத்திலும் தேவனுடைய அக்கினி மக்களை எரிப்பதையும் நாம் காணலாம். தேவனுடைய அக்கினி பரிசுத்தமற்ற எதையும் எரிக்கிறது.
நாம் தேவனை ஆராதிக்கும்போது, நாம் அதை விருப்பமில்லாமல் அல்லது அரை மனதுடன் செய்யக்கூடாது. நாம் அவரை முறையாகவும் பயபக்தியுடனும் வணங்க வேண்டும்.
".. அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்.."
யோவான் 4:24
No comments:
Post a Comment