Monday, April 8, 2024

யேகோவா இம்மேகா

யேகோவா இம்மேகா

பொருள்: "என்னோடு இருக்கும் தேவன்"

ஏசாயா 7:14 இல் கூறப்பட்டுள்ள "இம்மானுவேல்" என்பது பொதுவாக தம் மக்களுடன் தேவன் இருப்பதைக் குறிக்கும் நாமம். இது இஸ்ரவேலர்களுக்கு புதிது அல்ல. தேவன் அவர்கள் மத்தியில் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருந்தார் ("ஷெக்கினா"). அவர் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுடன் இருந்தார். அவருடைய பிரசன்னத்தில் மோசே, யோசுவா, தாவீது, சாலமோன் மற்றும் பலர் பிரவேசித்தனர்.
அவர்களுடன் இருந்த தேவன் இன்று நம்முடனும் இருக்கிறார்.
"நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை."
-யோசுவா 1:5
தேவ தூதனானவர் கிதியோனிடம் "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்" என்றார்.
(நியாயாதிபதிகள் 6:12)
இந்த இடத்தில் "இம்மேகா" என்று எழுதப்பட்டுள்ளது. "யேகோவா இம்மேகா" என்பது தேவன் உங்களுடன் தனிப்பட்ட உறவில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு கிறிஸ்தவன் தேவன் யார் என்பதை ஆவியானவரின் வெளிப்படுத்தல் மூலமாக, தனிப்பட்ட ரீதியில் தெரிந்திருக்க வேண்டும்.
'இம்மேகா'விற்கும் இம்மானுவேலுக்கும் வித்தியாசம் உள்ளது: இம்மானுவேல் என்றால் 'தேவன் நம்முடன் இருக்கிறார்';
"இம்மேகா" என்றால் 'தேவன் என்னுடன் இருக்கிறார்'. கோலியாத்தை எதிர்கொண்ட தாவீது, "கரடிகள் மற்றும் சிங்கங்களிலிருந்து அவரை விடுவிக்கக்கூடிய தேவன்" தன்னையும் விடுவிக்க முடியும் என்பதை அறிந்திருந்தார்: தாவீதுக்கு ஒரு "இம்மேகா வெளிப்பாடு" இருந்ததால்தான் அவர் சவுலின் கவசத்தை மறுத்தார். தேவனின் தனிப்பட்ட வெளிப்பாடு உங்களுக்கும் தேவை! அதுவே உங்கள் அசையா நம்பிக்கை நங்கூரமாக இருக்கட்டும்! ஆமேன்.

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...