பொருள்: உடன்படிக்கையின் தேவன்
“பேரீத்” என்ற வார்த்தைக்கு உடன்படிக்கை அல்லது விருத்தசேதனம் என்று பொருள்.
தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் பலருடன் உடன்படிக்கைகளை செய்துள்ளார். அவை நிபந்தனையுடனோ அல்லது இல்லாமலோ இருக்கும்.
நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்திற்குப் பிறகு பூமியின் அனைத்து மாம்சங்களோடும் அவர் செய்த முதல் உடன்படிக்கையின் அடையாளமான வானவில் என் நினைவிற்கு வருகிறது.
"ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்."
ஆதியாகமம் 6:18
கிதியோனின் மரணத்திற்குப் பிறகு நியாயாதிபதிகள் 9:46 இல் கூறப்படும் "பேரீத்" பாகாலைக் குறிக்கிறது. சீகேமில் அதன் வழிபாட்டாளர்களை அதனால் காப்பாற்ற முடியவில்லை. இந்த பொய்யான தெய்வத்தை வழிபட்டவர்கள் சிக்கித் தவித்தனர்.
ஆனால் நம் தேவன், ஏல் பேரீத், உடன்படிக்கையின் தேவன். அவருடைய ஜனங்களோடு அவர் செய்த உடன்படிக்கை என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை நாம் அறிந்திருப்பதால் இந்தப் பெயரை நாம் உரிமைக்கோரலாம். கடினமான காலங்கள் வந்து போகின்றன, ஆனால் தேவனின் வாக்குகள் என்றென்றும் உள்ளவை.
No comments:
Post a Comment