Thursday, February 29, 2024

கீலேயாத்தின் பிசின் தைலம்

 'கீலேயாத்' என்பது வேதத்தின் காலங்களில் குணப்படுத்தும் தைலங்களுக்கு பெயர் பெற்ற ஒரு ஊர். இது எரேமியா தீர்க்கதரிசியின் பிறப்பிடமாகும். கீலேயாத் தைலம் என்பது அந்த காலத்தில் தூபத்திற்காக, வாசனை திரவியமாக, ராஜாக்களின் அபிஷேகத்திற்காக, மருந்தாக மற்றும் தைலமாக பயன்படுத்தப்பட்ட பிரபலமான ஒரு தாவரத்தைக் குறிக்கிறது. பொதுவாக வேப்ப மரத்தின் காற்றை சுவாசிப்பது மிக ஆரோக்கியமானது என்று நமக்குத் தெரியும். அதேபோல இந்த மரத்தின் காற்றுப் பட்டாலே வியாதிகள் எல்லாம் தீருமாம். அங்கு கிடைக்கும் இனிமையான இந்த செடியைத் தேடி மக்கள் பல மைல்கள் பயணிப்பார்கள். சில வரலாற்றாசிரியர்கள் ஷேபாவின் ராணி இந்த தைலத்தை சாலமோன் ராஜாவுக்கு பரிசாக கொடுத்ததாக கூறுகிறார்கள்.

அந்த காலக்கட்டத்தில் , இஸ்ரவேல் மக்கள் மற்ற தெய்வங்களையும் சிலைகளையும் வழிபட்டு பின்தங்கிய நிலையில் இருந்தனர்.
எரேமியா தன் மக்கள் அழிவை நோக்கி இருந்த நிலைமையை நினைத்து வருத்தப்பட்டார். அவர்கள் ஜீவனுள்ள தேவனிடம் திரும்புவதற்குப் பதிலாக ஆன்மீக ரீதியில் நோய்வாய்ப்பட்டு பாவத்திலிருந்து மனம்திறும்ப மறுத்துவிட்டனர். இந்த வேதனையில், அவர் இவ்வாறு புலம்புகிறார்:
கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்? - எரேமியா 8:22
பேரழிவுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடியவர் இயேசு கிறிஸ்து. அவருக்கு உவமையாக எரேமியா இந்த தைலத்தை ஒப்பிடுகிறார்.
நியாயத்தீர்ப்பு எல்லோர் மேலும் விழுந்திருக்கிறது. நம்மை இரட்சிக்கக்கூடியவர் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே. அவரே நம் பிசின் தைலம். ஒவ்வொரு வலியையும் அவர் குறைக்கிறார். ஒவ்வொரு துக்கத்தையும் அவர் ஆறுதல்படுத்துகிறார். ஒவ்வொரு பலவீனத்திலும் நம்மை பலப்படுத்துகிறார். இன்று அவர் அளிக்கும் ஆறுதலை நாம் அவரிடமிருந்து பெறுவோம்.



No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...