மாற்கு 6:3 இல் நாசரேத்தின் மக்கள் இயேசுவைப் பற்றி பேசுவதைக் காணலாம்: "இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா?...என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்". - மாற்கு 6:3
'டெக்டான்' என்பது ஒரு தச்சரைக் குறிக்கும், ஆனால் அதற்கு சமமாக ஒரு கட்டிட அமைப்பாளரையும் குறிக்கும்.
அனைத்து சுவிசேஷங்களிலும் இயேசு தனது பிரசங்களில் கட்டிடங்களை தொடர்ந்து பயன்படுத்துவதை காணமுடிகிறது. (மர வேலைப்பாடுகளைக்குறித்து ஒரு முறைக்கூட பேசினதில்லை!)
கீழே விழுந்த கோபுரம் பற்றிய அவரது கருத்து (லூக்கா 13:4), ஒரு களஞ்சியத்தை கட்டிய பணக்காரரின் கதை (லூக்கா 12:16-21), ஒரு வேலியைக் கட்டிய திராட்சைத் தோட்ட உரிமையாளர் (மத்தேயு 21:33), ஒரு கோபுரம் கட்ட விரும்பும் நபர் (லூக்கா 14:28-30), மணலுக்கு மாறாக கன்மலையில் தனது வீட்டைக் கட்டியவன் (மத்தேயு 7:24-27)...
சுவிசேஷ புத்தகங்களில் இயேசு மற்ற எந்த ஒரு செயலையும் விட கட்டிடத்தின் அடிப்படையில் உவமைகளைப் பயன்படுத்தியதற்கான கூடுதல் எடுத்துக்காட்டுகள் உள்ளன. அநேகமாக இயேசுவும் அவருடைய தந்தை யோசேப்பும் கட்டிட அமைப்பாளர்களாகத்தான் இருந்திருக்கக்கூடும்.
அந்த நாட்களில் நாசரேத்து நகரத்தில் அதிக மரங்கள் இல்லை. அது ஏரோது ஆன்டிபாஸின் மிகப்பெரிய திட்டமான "செஃபோரிஸ்" என்ற பட்டணத்திலிருந்து 3 மைல் தொலைவில்தான் இருந்தது. யோசேப்பு இங்கு வேலை செய்திருப்பார் என்று அறிஞர்கள் நம்புகின்றனர்.
பரம் ஏறுவதற்கு முன், இயேசு தம்முடைய சீஷர்களிடம் சென்று நமக்காக ஒரு இடத்தைத் தயார் செய்வேன் என்று கூறினார்.
"என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு... ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்."
யோவான் 14:2
அவரே நம் சபையைக் கட்டுபவர்.
No comments:
Post a Comment