Thursday, February 29, 2024

பரிந்து பேசுகிறவர்

பரிந்து பேசுகிறவர் (ADVOCATE)

“என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்." - 1 யோவான் 2:1

பாவம் என்பது மனிதனின் சுபாவம். மனிதனின் தேவையை உணர்ந்து அதைத் தேவன் அன்பினால் பூர்த்தி செய்திருக்கிறார். நம்முடைய பாவம்தான் நம்மை தேவனுடைய மகிமையை விட்டு விலகச்செய்கிறது. அதனால் கிறிஸ்து நமது வழக்கறிஞராக, நம் பட்சத்தில் இருக்கிறார்.
ஒரு வழக்கறிஞர், நம் உதவிக்கு வரும் ஒரு நபர். நம் வழக்கை ஒரு நீதிபதியிடம் முறையிடுபவர். இயேசு பரலோகத்தின் நீதிமன்றத்தில் நமக்காக வாதாடுபவராய் இருக்கிறார். பிதா தன் குமாரனின் பரிந்துரையை தமது பரிசுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக உலகம் தொடங்குவதற்கு முன்பே செய்தார்.
சாத்தான் நம்மைக் குற்றம் சாட்டும்போது, கிறிஸ்து நம்மைப் பிரதிநிதித்துவம் செய்து நம்மைக் காப்பாற்றுகிறார். அவர் நம் வழக்கை விசாரிக்கும் வழக்கறிஞர். அவரது பிறப்பு, வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் - நமக்காக அவர் செய்த அனைத்து காரியங்களிலும் அவருடைய நீதி வெளிப்படுத்தப்படுகிறது.

[STRONG'S GREEK: 
3875: parakletos: called to one's aid]


No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...