பொருள்: நீண்ட ஆயுசுள்ளவர் / அநாதி தேவன், நித்திய தேவன்
வசனம்: பிதாவைக் குறிக்கும் இந்த நாமம் தானியேல் 7 ஆம் அதிகாரத்தில் மூன்று முறை வருகிறது.
நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது. நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார். அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போலத் துப்புரவாகவும் இருந்தது. அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.
தானியேல் 7:9
தேவன் அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் காட்சியை தானியேலின் தரிசனத்தில் நாம் காணலாம். அவர் பார்த்ததை வெளிப்படுத்த அற்புதமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.
தேவன் மனித குலத்தின் சரித்திரம் முழுவதிலும் வாழ்ந்துள்ளார். தேவன் எல்லா நிகழ்வுகளுக்கும் முதல் சாட்சி. அவருக்கு இரண்டாவது சாட்சி தேவையில்லை. அவரது தீர்ப்புகள் எப்போதும் நியாயமானவை. மற்றவர்களின் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. என்ன நடந்தாலும், ஏது நடந்தாலும், தேவன் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவரால் எதையும் கையாள முடியும்.
உங்கள் வாழ்க்கையில் காணப்படும் நிகழ்வுகளால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா? கடந்த காலத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், நிகழ்காலமோ அல்லது எதிர்காலமோ...தேவன் காண்கின்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்மால் காண முடியாததை தேவன் காண்கின்றார்.
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம், அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம், அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.
உபாகமம் 33:27
No comments:
Post a Comment