மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமுமானவர்
Pillar of cloud & Pillar of fire
[Heb: Ammud anan ve ammud esh]
"அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தப்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை."
இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தின் வழியாக பயணித்தபோது, இந்த ஸ்தம்பங்கள் [ஸ்தம்பம்-தூண் போன்ற ஒன்று] மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் அளித்தது. மேகஸ்தம்பம் அவர்களுக்கு பாலைவனத்தின் வெப்பத்தில் நிழலையும், அக்கினிஸ்தம்பம் குளிர்ச்சியான இரவில் வெப்பத்தையும் ஒளியையும் அளித்தது. இவை இல்லாவிட்டால், இஸ்ரவேலர்கள் சீனாய் வனாந்தரத்திலேயே இறந்துபோயிருக்ககூடும். இது தேவனுடைய கிருபையையும் இஸ்ரவேலர்கள் மீதான அவரது பாதுகாப்பையும் குறிக்கிறது. அது ஒருபோதும் அதன் இடத்தை விட்டு விலகவில்லை, அதேப்போல் தேவன் ஒருபோதும் நம்மை கைவிடமாட்டார்.
"...இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்."
மத்தேயு 28:20
வழிகாட்டுதல் மட்டுமல்லாமல், இந்த ஸ்தம்பங்கள் மற்ற தேசங்களுக்கு ஒரு சாட்சியாக நிற்கின்றன. நமது தேவன் அதிசயங்களின் தேவன் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
இது நாம் செல்ல வேண்டிய வழியில் நம்மை வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. நாம் வாழ்க்கையில் தெளிவு இல்லாமல் இருக்கும்போது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று குழப்பத்தில் இருக்கும் போது, எந்த கல்லூரியில் சேர வேண்டும், எந்த பாடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும், எந்த சபைக்கு செல்ல வேண்டும் என்ற சிறிய மற்றும் பெரிய காரியங்களில் தேவனை சார்ந்திருக்க வேண்டும். நாம் நம் சொந்த எண்ணங்களைச் சார்ந்திருக்கக் கூடாது, மாறாக கர்த்தர் காட்டும் திசையை நோக்கி செல்ல வேண்டும்.
"நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்."
சங்கீதம் 32:8
[Strong's Hebrew
5982. ammud - pillar, column
6051. anan - a cloud mass, cloud
784. esh - fire]
No comments:
Post a Comment