"இருக்கிறவராகவே இருப்பவர்"
(I AM WHO I AM)
(எபிரேயம்: எஹ்யே ஆஷர் எஹ்யே;
யார் உன்னை அனுப்பினார் என்று இஸ்ரவேலர்கள் கேட்கும்போது, மோசே எரியும் முட்செடியிலிருந்து பேசிய தேவனிடம் என்ன நாமத்தை சொல்ல வேண்டும் என்று கேட்கிறார்.
"அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்."
யாத்திராகமம் 3:14
தேவன் ஏற்கனவே ஆதியாகமத்தில், ஆபிரகாமுக்கு தனது பெயரை "யாவே" ("யேகோவா") என்று வெளிப்படுத்தினார், ஆனால் எகிப்தியர்களுக்கு அடிமைகளாக மாறிய பிறகு யூதர்கள் தங்கள் சொந்த தேவனின் பெயரை மறந்துவிட்டு எகிப்தின் கடவுள்களுக்கு சேவை செய்யத் தொடங்கினர். ஏனென்றால், மற்ற கடவுள்களைப் போல நம் தேவனுக்கு கோயிலோ, சிலையோ அல்லது பிறப்பு-இறப்பு கதை எதுவும் இல்லையே!
இன்றைய கிறிஸ்தவர்கள் தேவன் யார் என்ற கடினமான காரியத்தைப் புரிந்துகொள்வது அவசியம். அவர் அனைத்தையும் தன் கரங்களில் உள்ளடக்கியவர், போதுமானவர்.
இது எல்லா நாமத்திற்கும் மேலான நாமம். தேவன் அனைத்தையும் அடக்கி ஆள்கிறார் என்பதையும், அவர் தனது ஜனங்களைப் பார்க்கிறார் என்பதையும் விசுவாசிக்கு நினைவூட்டுகிறது.
நேற்றும், இன்றும், என்றும் தேவன் மாறாதவர் என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது. அன்றாட வாழ்வின் போராட்டங்களில், நாம் தேவனுடைய மகத்துவத்தையும் மேன்மையையும் மறப்பது எளிது.
ஆனால் அவரே தனக்குக் கொடுத்துக்கொண்ட இந்த நாமத்தையும், அது பிரதிபலிக்கும் அனைத்தையும் தியானிப்பதின் மூலம் பூமியில் நாம் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துக்கொள்ள உதவும்.
தேவன் எல்லையற்றவர், அவர் நம் வாழ்வை ஆழ்பவர், அவர் இருக்கிறவராகவே இருக்கிறார்.
"இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்."
எபிரேயர் 13:8
No comments:
Post a Comment