"நமக்கு முன்னோடினவராகிய இயேசு"
கிரேக்கம்: prodromos
ஆங்கிலம்: Forerunner
வசனம்: “நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
-எபிரேயர் 6:20
“முன்னோடினவர்” என்றால் ஒருவரின் வளர்ச்சிக்குக் காரணமாகக் கடந்த காலத்தில் இருந்த ஒருவர். "முன்மாதிரி" என்றும் சொல்லலாம்.
ஆங்கிலத்தில் Who is your Role Model? என்று கேட்டால் பலர் பல பிரபலங்களை சொல்வார்கள். கிறிஸ்தவர்களுக்கு எப்போதுமே இயேசுதான் No.1 Role Model!
ஒரு முன்னோடியைப் பின்தொடர்வது என்பது அவர்கள் சென்ற அதே பாதையில் செல்வது.
இயேசு, அவர் தேவக்குமாரன் என்றாலும், மனித சோதனைகளை எதிர்த்துப் போராட தனது தெய்வீக சக்திகளைப் பயன்படுத்தவில்லை. அவர் நம் அனைவரையும் போலவே 100% மனிதனாக இருந்தார். இதனால் நாம் அவரைப் பின்பற்றலாம்.
நமக்கும் பிதாக்கும் இடையே உள்ள திரைச்சீலையை இரண்டாகக் கிழித்து இயேசு ஒரு புதிய வழியை நமக்காகத் திறந்தார். நம் பாவங்களை நீக்கி, மனிதர்கள் தேவனோடு பங்குகொள்வதையும் அவர் சாத்தியமாக்கியுள்ளார்.
இயேசுவிடம் வருவது மட்டும் போதாது, வாழ்க்கை முழுவதும் அவரோடு நடந்து செல்வது மிகவும் முக்கியம். இயேசு வழி வகுத்தது மட்டுமல்லாமல் அன்பு நிறைந்த இதயத்துடன் நம்முடன் வருகிறார்.
பிதாவோடு என்றென்றும் இருக்கும் இடத்திற்கு இயேசு நம்மை அழைத்துச் செல்கிறார்.
இயேசு நமக்கு முன்பாகச் சென்றதால் மட்டுமே நம்மால் அங்கே செல்ல முடியும்! இயேசு முதலில் கதவைத் திறந்து பலியை செலுத்தினதால் மட்டுமே நாமும் அங்கு செல்ல முடியும்! மெல்கிசேதேக்கின் முறைமையின் படி கிறிஸ்து என்றென்றும் பிரதான ஆசாரியராக நமக்காக பரிந்து பேசுவதால் மட்டுமே நாம் உள்ளே செல்ல முடியும்!
No comments:
Post a Comment